/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குளிர் தாக்கத்தால் நோய் அதிகரிக்கும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை
/
குளிர் தாக்கத்தால் நோய் அதிகரிக்கும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை
குளிர் தாக்கத்தால் நோய் அதிகரிக்கும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை
குளிர் தாக்கத்தால் நோய் அதிகரிக்கும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை
ADDED : டிச 01, 2025 06:09 AM
பெங்களூரு: பெங்களூரில் ஒரு வாரமாக, குளிர் காற்று வீசுவதால் மக்களின் ஆரோக்கியம் பாதிப்படைகிறது. காய்ச்சல், சளியால் அவதிப்படுகின்றனர். வரும் நாட்களில் குளிர் அதிகரிக்கும் என்பதால், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து, மருத்துவ வல்லுநர்கள் கூறியதாவது:
பெங்களூரில் வானிலை மாறியுள்ளது. காலை முதல் மாலை வரை மேகமூட்டம், அதன்பின் குளிர்ந்த காற்று வீசுகிறது. இது, மக்களின் உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சளி, காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி போன்ற பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். இவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மூத்த குடிமக்கள், 4 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் அதிகமாக பாதிப்படைந்துள்ளனர். பெற்றோர் பீதியடைந்து மருத்துவமனைக்கு பிள்ளைகளை அழைத்து வருகின்றனர்.
வரும் நாட்களில் குளிரின் தாக்கம் அதிகரிக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே கர்ப்பிணியர், மூத்த குடிமக்கள், சிறார்களின் ஆரோக்கியத்தில், கூடுதல் கவனம் தேவை. கதகதப்பான உடைகள் அணிவிப்பது, சூடான ஊட்டச்சத்தான உணவு, பழரசங்கள் சாப்பிடுவது நல்லது.
அவசியம் இல்லையென்றால், குளிரில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். டிசம்பர், ஜனவரியில் குளிரின் தாக்கம் அதிகம் இருக்கும். ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம். குளி ர் காலத்தில் கொசுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கும். டெங்கு, நிமோனியா, சிக்குன்குனியா போன்ற நோய்களும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

