/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பல இடங்களில் குளிர் காற்று வீசும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
/
பல இடங்களில் குளிர் காற்று வீசும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
பல இடங்களில் குளிர் காற்று வீசும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
பல இடங்களில் குளிர் காற்று வீசும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
ADDED : நவ 20, 2025 03:59 AM
இதுகுறித்து, வானிலை ஆய்வு மைய வல்லுநர்கள் கூறியதாவது:
கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், குளிர் தீவிரமடைந்து வருகிறது. அடுத்த இரண்டு நாட்களில் குளிர் மேலும் தீவிரமடையும் அறிகுறி தென்படுகிறது. பீதர், கலபுரகி, விஜயபுரா, பாகல்கோட், பெலகாவி மாவட்டங்களில் குளிர் காற்று வீசலாம்.
பெங்களூரில் மேகமூட்ட மான வானிலை சூழ்நிலையுடன், குளிர்ச்சியாக இருக்கும். சில மாவட்டங்களில், வெப்ப நிலை வழக்கத்தை விட, குறைவாக இருக்கும். வரும் வாரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை, வழக்கத்தை விட நான்கு முதல் ஆறு டிகிரி செல்ஷியஸ் குறைவாக இருக்கும். 21ம் தேதிக்கு பின், வெப்ப நிலை இயல்பு நிலைக்கு திரும்பலாம்.
கலபுரகி, பீதர், ராய்ச்சூர், கொப்பால் உட்பட, பல மாவட்டங்களில், குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்ஷியசாக குறையும். மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
இதற்கிடையே வங்கக்கடலில் காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால், துமகூரு, சிக்கபல்லாபூர், கோலார், பெங்களூரு, மாண்டியா, ராம்நகர், மைசூரு, சாம்ராஜ்நகர், குடகு, ஹாசன் மாவட்டங்களில், 22ம் தேதி வரை, சாதாரணமான மழையோ அல்லது கன மழை யோ பெய்யக்கூடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

