/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கவயலில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா
/
தங்கவயலில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா
ADDED : ஜன 18, 2026 05:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: தங்கவயல் தொகுதி அ.தி.மு.க., சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
தொகுதியின் அ.தி.மு.க., செயலர் பொன் சந்திர சேகர் தலைமையில், ராஜசேகர், வக்கீல் ஜெகநாதன், சீனிவாசன் முன்னிலையில், ஆண்டர்சன்பேட்டை ஓடானியேல் சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர்., ஜெயராமன், எம்.ஜி.ஆர்., பற்றிய பாடல்களை பாடினார். வி.சி.நடராஜன், பாபு, விக்னேஷ், அர்ஜூனன் ஆல்பர்ட், அப்துல்லா ஆகியோர் எம்.ஜி.ஆரின் பெருமைகள் குறித்து பேசினர். சுப்ரமணி, கிருபாகரன் ஆகியோர் இனிப்புகள் வழங்கினர்.

