/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
லாரிகள் ஸ்டிரைக் கைவிட அமைச்சர் வேண்டுகோள்
/
லாரிகள் ஸ்டிரைக் கைவிட அமைச்சர் வேண்டுகோள்
ADDED : ஏப் 15, 2025 04:56 AM
பெங்களூரு: லாரி டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுமாறு போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
பெங்களூரில் நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி அளித்த பேட்டி:
கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை பல முறையை உயர்த்தி உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டன. ஆனால், அப்போது எல்லாம் லாரி டிரைவர்கள் ஒரு முறை கூட வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவில்லை.
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் காரணமாகவே, மாநில அரசு டீசல் விலையை இரண்டு ரூபாய் உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
தென்னிந்தியாவில் புதுச்சேரியை தவிர மிக குறைந்த விலையில் டீசல் விற்பனை செய்யப்படுவது கர்நாடகாவில் தான். எனவே, லாரி டிரைவர்கள், முகவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடகா லாரி டிரைவர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழக லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்து உள்ளது. இப்பிரச்னை தீரும் வரை தமிழக லாரிகள் கர்நாடகாவிற்குள் வராது என கூறி உள்ளனர்.