/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிரதாப் சிம்ஹா, பிரதீப் ஈஸ்வருக்கு அமைச்சர் லட்சுமி அறிவுரை
/
பிரதாப் சிம்ஹா, பிரதீப் ஈஸ்வருக்கு அமைச்சர் லட்சுமி அறிவுரை
பிரதாப் சிம்ஹா, பிரதீப் ஈஸ்வருக்கு அமைச்சர் லட்சுமி அறிவுரை
பிரதாப் சிம்ஹா, பிரதீப் ஈஸ்வருக்கு அமைச்சர் லட்சுமி அறிவுரை
ADDED : நவ 01, 2025 11:21 PM
உடுப்பி: பா.ஜ.,வின் முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் ஆகியோருக்கு, மாநில மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் அறிவுரை கூறியுள்ளார்.
உடுப்பியில் நேற்று அவர் கூறியதாவது:
இளைஞர்களான பிரதாப் சிம்ஹா, பிரதீப் ஈஸ்வர் ஆகியோர், கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி சண்டை போடுவது, எனக்கு வருத்தம் அளிக்கிறது. அவர்களுக்கு அக்கா என்ற ஸ்தானத்தில் நின்று, இருவருக்கும் அறிவுரை கூறுகிறேன். நானும் பல அவமதிப்புகளை சந்தித்துள்ளேன்.
அரசியல்வாதிகளை மக்கள் கவனிக்கின்றனர். அவர்களுக்கு 'ரோல் மாடலா'க இருக்க வேண்டுமே தவிர, வெட்கப்படும்படி நடந்து கொள்ள கூடாது. உங்கள் இருவரின் சண்டையில், 'உங்களின் பெற்றோரை ஏன் இழுக்கிறீர்கள்? இந்த விஷயத்தை இத்தோடு விட்டு விடுங்கள். இருவருமே அறிவாளிகள். நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்'.
நான் காங்கிரசின் சாதாரண தொண்டர். நவம்பர் புரட்சி மற்றும் அமைதி என்பது மேலிடம் சம்பந்தப்பட்ட விஷயங்கள். நான் உட்பட, அனைவரும் கட்சி என்ன சொல்கிறதோ, அதை பின்பற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

