/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மொபைல் போன் ஒட்டு கேட்பு அமைச்சர் பரமேஸ்வர் மறுப்பு
/
மொபைல் போன் ஒட்டு கேட்பு அமைச்சர் பரமேஸ்வர் மறுப்பு
மொபைல் போன் ஒட்டு கேட்பு அமைச்சர் பரமேஸ்வர் மறுப்பு
மொபைல் போன் ஒட்டு கேட்பு அமைச்சர் பரமேஸ்வர் மறுப்பு
ADDED : ஜன 30, 2026 06:37 AM

பெங்களூரு: கவர்னர் தாவர்ச்ந்த் கெலாட்டின் மொபைல் போன் ஒட்டு கேட்கப்படுகிறதா என பா.ஜ.,வின் குற்றச்சாட்டை உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் மறுத்து உள்ளார்.
சட்டசபையில் நேற்று முன்தினம் நடந்த கவர்னர் உரை மீதான விவாதத்தில், மாநில அரசு கவர்னர் தாவர்சந்த் கெலாட் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மொபைல் போன்களை அரசு ஒட்டு கேட்கிறது என பா.ஜ.,வினர் குற்றஞ்சாட்டினர்.
இது குறித்து, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேற்று கூறியதாவது:
பா.ஜ.,வினர் தங்கள் கடந்த கால ஆட்சியில் செய்த சம்பவங்களை, காங்கிரஸ் செய்வதாக கூறுகின்றனர். காங்கிரஸ் அரசு யாருடைய மொபைல் போன்களையும் ஒட்டு கேட்பதில்லை. இது போன்ற வேலைகளில் எந்த காலத்திலும் ஈடுபடாது.
சிக்கமகளூரில் அமலுக்கு வராத 'வெறுப்பு பேச்சு மசோதா'வை பின்பற்ற வேண்டும் என கூறிய போலீஸ் எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஏதாவது தவறு நடந்தால் நாங்களே நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

