/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
லிப்டில் சிக்கிய அமைச்சர் மருத்துவமனையில் பரபரப்பு
/
லிப்டில் சிக்கிய அமைச்சர் மருத்துவமனையில் பரபரப்பு
லிப்டில் சிக்கிய அமைச்சர் மருத்துவமனையில் பரபரப்பு
லிப்டில் சிக்கிய அமைச்சர் மருத்துவமனையில் பரபரப்பு
ADDED : ஜன 12, 2026 06:43 AM
பீதர்: உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் முனியப்பாவும், எம்.எல்.சி., சந்திரப்பாவும், 'லிப்டில்' சிக்கி பரிதவித்தனர்.
கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரேவின் தந்தையும், முன்னாள் அமைச்சருமான பீமண்ணா கன்ட்ரே, 102, உடல்நிலை பாதிப்பால், பீதர் நகரின் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெறுகிறார்.
இவரை பார்த்து நலம் விசாரிக்கும் நோக்கில், உணவுத்துறை அமைச்சர் முனியப்பாவும், காங்கிரஸ் எம்.எல்.சி., சந்திரப்பாவும் நேற்று காலை மருத்துவமனைக்கு சென்றனர். மாடிக்கு செல்ல லிப்டில் ஏறினர். பாதியில் லிப்ட் பழுதடைந்து நின்றது. இருவரும் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
அதன்பின் அதிகாரிகள், லிப்ட் பழுது பார்க்கும் பொறியாளரை வரவழைத்து, சரி செய்த பின் அமைச்சரும், எம்.எல்.சி.,யும் பாதுகாப்பாக லிப்டில் இருந்து வெளியே வந்தனர். 15 நிமிடங்கள், அவர்கள் லிப்டில் சிக்கியிருந்ததால், சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

