/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
லோக் ஆயுக்தாவில் சொத்து விபரம் தாக்கல் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அலட்சியம்
/
லோக் ஆயுக்தாவில் சொத்து விபரம் தாக்கல் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அலட்சியம்
லோக் ஆயுக்தாவில் சொத்து விபரம் தாக்கல் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அலட்சியம்
லோக் ஆயுக்தாவில் சொத்து விபரம் தாக்கல் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அலட்சியம்
ADDED : நவ 07, 2025 05:45 AM
பெங்களூரு: 'கர்நாடகாவின் ஐந்து அமைச்சர்கள், 67 எம்.எல்.ஏ.,க்கள், 28 எம்.எல்.சி.,க்கள் ஆகியேர் தங்கள் சொத்து விபரங்களை வெளியிடவில்லை' என லோக் ஆயுக்தா அறிவித்து உள்ளது.
கர்நாடகாவில் மக்கள் பிரதிநிதிகள், ஆண்டுதோறும் தங்களின் சொத்து, கடன் விபரங்களை லோக் ஆயுக்தாவில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.
நடப்பாண்டு, ஆக., 28ம் தேதிக்குள் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. கெடு முடிந்து, இரண்டு மாதங்களான பின்னரும், பெரும்பாலானவர்கள் சமர்ப்பிக்கவில்லை. சொத்து விபரங்களை தாக்கல் செய்யாத மக்கள் பிரதிநிதிகளின் பெயர் பட்டியலை, லோக் ஆயுக்தா நேற்று வெளியிட்டு உள்ளது. அதன் விபரம்:
அமைச்சர்கள் உணவு பொது வினியோக துறை அமைச்சர் முனியப்பா, சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், வீட்டு வசதி துறை அமைச்சர் ஜமீர் அகமது கான், மாநகராட்சி நிர்வாக துறை அமைச்சர் ரஹீம் கான், கால்நடை துறை அமைச்சர் வெங்கடேஷ்.
காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜண்ணா, லட்சுமண் சவதி, அசோக் மஹாதேவப்பா பட்டன், மேட்டி ஹூல்லப்பா யமனப்பா, விஜயானந்த் காசப்பனவர், விட்டல் தொண்டிபா, எம்.ஒய்.பாட்டீல், அல்லம்மா பிரபு பாட்டீல், கனீஸ் பாத்திமா, பசனகவுடா துரவிகல், பசவராஜ் ராயரெட்டி, ராகவேந்திர பசவராஜ் ஹிட்னால், குருபாதகவுடா சங்கனகவுடா பாட்டீல், கோனரெட்டி, வினய் குல்கர்னி.
சதீஷ் கிருஷ்ணா சைல், பசவராஜ் நீலப்பா சிவன்னவர், கணேஷ், கோபாலகிருஷ்ணா, பசவந்தப்பா, சங்கமேஸ்வர், ராஜு கவுடா, நயனா மோட்டம்மா, சீனிவாசா, ஆனந்த், ரங்கநாத், வெங்கடேஷ், சுப்பாரெட்டி, ரூபகலா, நஞ்சே கவுடா, சீனிவாசா.
ஹாரிஸ், சிவண்ணா, சீனிவாசய்யா, பாலகிருஷ்ணா, யோகேஸ்வர், உதய், ரவிகுமார், ரமேஷ் பண்டிசித்தே கவுடா, ரவிசங்கர், அனில் சிக்கமாது, ஹரிஷ் கவுடா, கிருஷ்ணமூர்த்தி, புட்டரங்க ஷெட்டி ஆகிய 44 பேர்.
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சரனு சலகர், சித்துபாட்டீல், தினகர் கேசவ் ஷெட்டி, சந்திரப்பா, சுரேஷ் கவுடா, கோபாலய்யா, சுரேஷ், சிமென்ட் மஞ்சு, பரத் ஷெட்டி, பகிரதி முருள்யா ஆகிய 10 பேர்.
ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் சாரதா புரா நாயக், சுரேஷ் பாபு, ரவிகுமார், வெங்கடசிவா ரெட்டி, சம்ருதி மஞ்சுநாத், பாலகிருஷ்ணா, ரேவண்ணா, மஞ்சு, மஞ்சுநாதா ஆகிய 9 பேர்.
மேலும், கல்யாண ராஜ்ய பிரகதி கட்சியின் ஜனார்த்தன ரெட்டி, சர்வோதயா கர்நாடகா கட்சியின் தர்ஷன் புட்டண்ணய்யா, சுயேச்சை லதா மல்லிகார்ஜுன், புட்டசாமி கவுடா ஆகியோரும் சொத்து விபரங்களை தாக்கல் செய்யவில்லை.
எம்.எல்.சி.,க்கள் காங்கிரசின் சலீம் அகமது, அப்துல் ஜப்பார், அனில் குமார், பசனகவுடா பதரலி, ஐவான் டிசோசா, நசீர் அகமது, ராஜேந்திர ராஜண்ணா, ராமோஜி கவுடா, சுனில் கவுடா பாட்டீல், ஷ்ரவணா, சுதாம் தாஸ், திப்பன்னப்பா கமாக்னுார், திம்மையா என 13 பேர்.
பா.ஜ.,வின் அககூர் விஸ்வநாத், மாருதிராவ் முலே, நாகராஜு, நவீன், பிரதீஷ் ஷெட்டர், பூஜார், சசில் நமோஷி, சங்கனுாரா, சுனில் வல்யாபுர், சதீஷ் என 10 பேர்.
ம.ஜ.த.,வின் கோவிந்தராஜு, ஜவராயி கவுடா, மஞ்சேகவுடா, சூரஜ் ரேவண்ணா, விவேகானந்தா என 5 பேர் என மொத்தம் 28 பேர் சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவில்லை.
கெடு காலம் முடிந்த பின், திட்டத்துறை அமைச்சர் டி.சுதாகர், எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசின் நாகராஜா, பதான் யாசிர் அகமது கான், ம.ஜ.த.,வின் கிருஷ்ணப்பா, எம்.எல்.சி., பா.ஜ.,வின் சிதானந்த கவுடா ஆகியோர் சொத்து விபரங்களை சமர்ப்பித்து உள்ளனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

