/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
துபாய் விமான நிலையத்தில் தவிக்கும் ம.ஜ.த., - எம்.எல்.சி.,
/
துபாய் விமான நிலையத்தில் தவிக்கும் ம.ஜ.த., - எம்.எல்.சி.,
துபாய் விமான நிலையத்தில் தவிக்கும் ம.ஜ.த., - எம்.எல்.சி.,
துபாய் விமான நிலையத்தில் தவிக்கும் ம.ஜ.த., - எம்.எல்.சி.,
ADDED : மார் 01, 2026 05:18 AM
துபாய்: மத்திய கிழக்கில் போர் நடக்கும் வேளையில் துபாய் விமான நிலையத்தில் தனது குடும்பத்துடன் சிக்கி தவிப்பதாக ம.ஜ.த., - எம்.எல்.சி., போஜேகவுடா வீடியோ வெளியிட்டு உள்ளார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது போர் தொடுத்து உள்ளன. நேற்று காலை முதல் வான்வழித் தாக்குதல் நடக்கிறது. இதனால், மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது.
இதனால், துபாய் உள்ளிட்ட நாடுகளில் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், துபாயில் உள்ள விமான நிலையத்தில் ம.ஜ.த., - எம்.எல்.சி., போஜேகவுடா சிக்கி தவிப்பதாக வீடியோ வெளியிட்டு உள்ளார்.
'போர் காரணமாக விமான நிலையம் முடங்கிவிட்டது. எப்போது அடுத்த விமானம் இந்தியாவிற்கு புறப்படும் என தெரியவில்லை. அறிவிப்பு எதுவும் வரவில்லை. நானும், எனது குடும்பத்தினரும் விமான நிலையத்தில் சிக்கி உள்ளோம்' என கூறப்பட்டு உள்ளது.