/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கவயலில் கோலாகல விழா மாட்டுவண்டி ஓட்டிய எம்.எல்.ஏ.,
/
தங்கவயலில் கோலாகல விழா மாட்டுவண்டி ஓட்டிய எம்.எல்.ஏ.,
தங்கவயலில் கோலாகல விழா மாட்டுவண்டி ஓட்டிய எம்.எல்.ஏ.,
தங்கவயலில் கோலாகல விழா மாட்டுவண்டி ஓட்டிய எம்.எல்.ஏ.,
ADDED : நவ 02, 2025 03:25 AM

தங்கவயலில் கன்னட ராஜ்யோத்சவா விழா கோலாகலமாக நடந்தது. கன்னட சங்கத்தில் கொடியேற்றி கலை நிகழ்ச்சிகள் நடத்தி, புவனேஸ்வரி அம்மன் தேர்கள், தாரை தப்பட்டை ஒலிக்க ஆடல் - பாடலுடன் நகர்வலம் கொண்டு வரப்பட்டன.
விழாவில் தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, எஸ்.பி., ஷிவன்ஷு ராஜ்புத், தாசில்தார் பாரத், நகராட்சி தலைவர் இந்திராகாந்தி, ஆணையர் ஆஞ்சநேயலு பங்கேற்றனர்.
தங்கவயல் தாலுகாவில் உள்ள 15 கிராம பஞ்சாயத்துகளில் இருந்து தலா ஒரு தேர், கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சார்பில் ஒரு தேர் உட்பட 20 தேர்களில் புவனேஸ்வரி அம்மன் படத்தை அலங்கரித்து நகர்வலம் கொண்டு வந்தனர். புவனேஸ்வரி அம்மன் சிலை இருந்த மாட்டு வண்டியை ரூபகலா ஓட்டி வந்தார்.
தங்கச் சுரங்க முன்னாள் அதிகாரிகள் சங்க கவுரவத் தலைவர் டாக்டர் ராஜேந்திர குமார், தலைவர் திவாகரன், ம.ஜ.த., செயலர் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.
தங்கவயல் தமிழ்ச் சங்கத்தில் நடந்த விழாவில் தலைவர் சு.கலையரசன் தலைமையில் கன்னட கொடி ஏற்றப்பட்டது.
செயல் தலைவர் கமல் முனிசாமி, ஆனந்த கிருஷ்ணன், திருமுருகன், ஆர்.வி.குமார், முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
பெமல் நகர் ஆலமரம் பகுதியில் நடந்த விழாவில் கிரா ம பஞ்சாயத்து தலைவர் சுரேஷ், பஞ்சாயத்து உறுப்பினர் பாபு, கருணா மூர்த்தி, மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர் மகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

