/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பல்கலைக்கழகத்தை மூட நினைத்தால்... எம்.எல்.ஏ., எச்சரிக்கை
/
பல்கலைக்கழகத்தை மூட நினைத்தால்... எம்.எல்.ஏ., எச்சரிக்கை
பல்கலைக்கழகத்தை மூட நினைத்தால்... எம்.எல்.ஏ., எச்சரிக்கை
பல்கலைக்கழகத்தை மூட நினைத்தால்... எம்.எல்.ஏ., எச்சரிக்கை
ADDED : மே 06, 2026 04:02 AM

மாண்டியா: 'மாண்டியா பல்கலை கழகத்தை மூட நினைத்தால் அமைதியாக இருக்க மாட்டோம்; பல்கலை கழகத்திற்கு தீ வைக்கப்படும்' என, உயர் கல்வி அமைச்சர் எம்.சி.சுதாகருக்கு, மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவிகுமார் கனிகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாண்டியா டவுன் எம்.சி.ரோட்டில் உள்ள, கர்நாடக அரசின் மாண்டியா பல்கலை கழகத்தில் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதாக கூறி, அந்த பல்கலை கழகத்தை மூட, உயர் கல்வித்துறை முடிவு செய்து உள்ளது. இதற்கு மாண்டியா மாவட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், மாண்டியாவில் நடந்த தனியார் நிகழ்ச்சியில், அந்த தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவிகுமார் கனிகா பேசியதாவது:
மாண்டியா பல்கலை கழகத்தை எதற்காக மூட வேண்டும்; எங்கள் மாணவர்கள் மீண்டும் மைசூரு, பெங்களூரு சென்று படிக்க வேண்டுமா? எங்கள் ஊரில் உள்ள பல்கலை கழகத்தை மூட நினைத்தால் அமைதியாக இருக்க மாட்டோம்.
உயர் கல்வி அமைச்சர் எம்.சி.சுதாகர் இந்த வழியாகத்தான், மைசூரு செல்ல வேண்டும். அவரது காரை நிறுத்தி கேள்வி கேட்போம். அதையும் மீறி பல்கலை கழகம் மூடப்பட்டால், பல்கலை கழகத்திற்கு தீ வைப்போம். எதற்காகவும் பயப்பட மாட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

