/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வர், துணை முதல்வர் வீட்டுக்கு படையெடுக்கும் எம்.எல்.ஏ.,க்கள்
/
முதல்வர், துணை முதல்வர் வீட்டுக்கு படையெடுக்கும் எம்.எல்.ஏ.,க்கள்
முதல்வர், துணை முதல்வர் வீட்டுக்கு படையெடுக்கும் எம்.எல்.ஏ.,க்கள்
முதல்வர், துணை முதல்வர் வீட்டுக்கு படையெடுக்கும் எம்.எல்.ஏ.,க்கள்
ADDED : அக் 22, 2025 03:15 AM
பெங்களூரு: நவம்பரில் அமைச்சரவை மாற்றி அமைத்து, புதியவர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என, தகவல் வெளியானதால் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஆசை துளிர்விட்டுள்ளது. தீபாவளி வாழ்த்துக் கூறுவது போன்று, முதல்வர், துணை முதல்வரின் வீட்டுக்கு படையெடுக்கின்றனர்.
வரும் நவம்பரில், காங்கிரஸ் அரசு அமைந்து இரண்டரை ஆண்டு நிறைவடையவுள்ளது. அப்போது முதல்வர் மாற்றம் நடக்கும். அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும். 15க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நீக்கப்படுவர். சுறுசுறுப்பாக செயல்படும் புதியவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படும் என, தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் அமைச்சர் கலக்கத்தில் தவிக்கும் நிலையில், அமைச்சர் பதவி எதிர்பார்க்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் குஷி அடைந்துள்ளனர். இம்முறை தங்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்றே நம்புகின்றனர்.
ஏற்கனவே போன் மூலமாக, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரை தொடர்பு கொண்டு, அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டால், தங்களுக்கு வாய்ப்பளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
தற்போது தீபாவளி என்பதால், வாழ்த்துக் கூறுவதை போன்று, இனிப்புகள், பழங்களுடன் முதல்வர் சித்தாமையா, துணை முதல்வர் சிவகுமாரின் இல்லத்துக்கு செல்கின்றனர். தீபாவளி வாழ்த்துக் கூறுகின்றனர்.
'அமைச்சரவையை மாற்றி அமைக்கப்படும்போது, எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள். இரண்டரை ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி, அடுத்த சட்டசபை தேர்தலில், கட்சியை ஆட்சியில் அமர்த்த உழைப்போம்' என, வேண்டுகோள் விடுத்ததாக, தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரசுக்கு சித்தராமையா, சிவகுமார் என, இருவருமே முக்கியமான தலைவர்கள். இவர்களின் பேச்சுக்கு மேலிடம் மதிப்புக் கொடுக்கிறது. எனவே இருவரின் வீடுகளுக்கும் எம்.எல்.ஏ.,க்கள் படையெடுக்கின்றனர்.