/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
2வது வாய்ப்பு வழங்கப்படாது எம்.எல்.ஏ.,க்களுக்கு 'குட்டு'
/
2வது வாய்ப்பு வழங்கப்படாது எம்.எல்.ஏ.,க்களுக்கு 'குட்டு'
2வது வாய்ப்பு வழங்கப்படாது எம்.எல்.ஏ.,க்களுக்கு 'குட்டு'
2வது வாய்ப்பு வழங்கப்படாது எம்.எல்.ஏ.,க்களுக்கு 'குட்டு'
ADDED : ஆக 12, 2025 05:50 AM
பெங்களூரு : “இனி பெயர் சொல்லி அழைக்கும்போது, சட்டசபையில் இல்லை என்றால் இரண்டாவது வாய்ப்பு தரப்படாது,” என, சபாநாயகர் காதர், எம்.எல்.ஏ.,க்களுக்கு காட்டமாக தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, கேள்வி கேட்டிருந்த சில எம்.எல்.ஏ.,க்கள் இருக்கவில்லை. கேள்வி நேரம் முடியும் வேளையில், மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவிகுமார் கானிகா, தான் வந்துவிட்டதாக, சபாநாயகரிடம் தெரிவித்தார்.
அப்போது கோபமடைந்து, சபாநாயகர் காதர் கூறியதாவது:
நான் அழைக்கும்போது, சட்டசபையில் ஏன் இருக்கவில்லை; எங்கே சென்றீர்கள்? கேள்வி நேரத்தின்போதும், பெயர் அழைக்கும்போதும், சம்பந்தப்பட்ட உறுப்பினர் சட்டசபையில் இல்லை என்றால், இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படாது. நீங்கள் கடைசி நபர் என்பதால், இந்த ஒருமுறை மட்டும் வாய்ப்பு தருகிறேன். அனைத்து உறுப்பினர்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நீதிமன்றத்தில் தங்கள் பெயரை அழைக்கும்போது, எங்கேயாவது 'டீ' குடித்துக் கொண்டிருந்தால், மீண்டும் வாய்ப்பு தருவதில்லை. அது போன்று, இனி பெயர் அழைக்கும்போது, சட்டசபையில் இல்லை என்றால் இரண்டாவது வாய்ப்பு தரப்படாது.
இவ்வாறு பேசினார்.