/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'கிரஹலட்சுமி' பணம் பிடித்தம் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை
/
'கிரஹலட்சுமி' பணம் பிடித்தம் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை
'கிரஹலட்சுமி' பணம் பிடித்தம் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை
'கிரஹலட்சுமி' பணம் பிடித்தம் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை
ADDED : ஏப் 11, 2026 04:26 AM
பெங்களூரு: கிரஹலட்சுமி திட்ட பணத்தை, வங்கிகள் உதவியுடன் பிடித்தம் செய்யும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டு உள்ளார்.
கர்நாடக அரசு கிரஹலட்சுமி திட்டத்தில், பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது. பெண்கள் வங்கிக்கணக்கிற்கு பணம் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இந்நிலையில், சில தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிகளுடன் சேர்ந்து கொண்டு, பயனாளிகள் வாங்கிய கடனுக்காக, கிரஹலட்சுமி திட்ட பணத்தை பிடித்தம் செய்வதாக, முதல்வர் சித்தராமையாவின் கவனத்திற்கு, காங்கிரஸ் எம்.எல்.சி., தினேஷ் கூளிகவுடா கொண்டு சென்றார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கி, பணத்தை திரும்ப செலுத்த முடியாத நிலையில் இருக்கும் பெண்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் நோக்கில், வங்கி அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து, நிதி நிறுவனங்கள், அரசு வழங்கும் 2,000 ரூபாயில் பிடித்தம் செய்கின்றன. இது, வலுக்கட்டாயமாகவோ அல்லது மிரட்டியதோ வசூலிக்கப்படுகிறது. இதுபற்றி முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளேன்,'' என்றார்.
இதையடுத்து கிரஹலட்சுமி திட்ட பணத்தை பிடித்தம் செய்யும் நிதி நிறுவனங்கள், அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, சித்தராமையா நேற்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை அமல்படுத்தக்கோரி உள்துறை கூடுதல் செயலர், நகர்ப்புற வளர்ச்சி கூடுதல் தலைமை செயலர், மாவட்ட கலெக்டர்கள், தலைமை செயல் அதிகாரிகளுக்கு, தலைமை செயலர் ஷாலினி கடிதமும் எழுதி உள்ளார்.

