ADDED : செப் 08, 2026 08:01 PM

சிக்கமகளூரு: ''புதிய அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லை. அரசியலிலும், வீட்டிலும் பெண்கள் தங்கள் உரிமைக்காக ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும்,'' என, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.சி., மோட்டம்மா கூறினார்.
சிக்கமகளூரில் நேற்று மோட்டம்மா அளித்த பேட்டி:
பெ ண்கள் தாங்கள் வலிமையானவர்கள், திறமையானவர்கள் என்பதை நிரூ பிக்காவிட்டால், அவர்கள் ஓரங்கட்டப்படுவர். எங்களுக்கு ஒரு வா ய்ப்பு அளிக்க நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பேச வேண்டும் என்று லட்சுமி ஹெப்பால்கரிடம் கூறி உள்ளேன்.
மு தலில், நமக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று நாம் குரல் எழுப்ப வேண்டும். இல்லை என்றால், நாங்கள் அது பற்றி கவலைப்பட மாட்டோம்.
அரசியலிலோ அல்லது வீட்டிலோ நாம் குரல் கொடுக்கவில்லை என்றால், நம்மை யாரு ம் அங்கீகரிக்க மாட்டார்கள். பெண்கள் வீட்டில் குரல் கொடுக்கவில்லை என்றால், யாரும் அவர்களை அங்கீகரிக்க மாட்டார்கள். அவர்களை மூலையில் தள்ளிவிடுவர்.
அதுபோன்று அரசியலிலும் பெண்கள் தங்கள் உரிமைக்காகவும், அந்தஸ்துக்காகவும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
