/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மூன்றாவதும் பெண் குழந்தை கால்வாயில் வீசிய தாய் கைது
/
மூன்றாவதும் பெண் குழந்தை கால்வாயில் வீசிய தாய் கைது
மூன்றாவதும் பெண் குழந்தை கால்வாயில் வீசிய தாய் கைது
மூன்றாவதும் பெண் குழந்தை கால்வாயில் வீசிய தாய் கைது
ADDED : செப் 23, 2025 04:56 AM
பல்லாரி: மூன்றாவதும் பெண் குழந்தையாக பிறந்ததால், கால்வாயில் வீசிக் கொன்ற பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த தாய் கைது செய்யப்பட்டார்.
பீஹாரை சேர்ந்தவர் சரோஜ் குமார். இவரது மனைவி பிரியங்கா தேவி. இருவரும் பல்லாரியில் தங்கி உள்ளனர். சரோஜ் குமார், தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இத்தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.
கர்ப்பமாக இருந்த பிரியங்கா தேவிக்கு, இரண்டு மாதங்களுக்கு முன், மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால், கோபத்திலும், வேதனையிலும் பிரியங்கா இரு ந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன், குழந்தை காணாமல் போனதாக, சரோஜ் குமார், தோரங்கல் போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையில், சந்துாரில் கால்வாய் ஒன்றில் பெண் குழந்தை சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு, பிரியங்கா தேவியிடம் காண்பித்தனர். தன் குழந்தை தான் என்று கூறி கதறி அழுதார்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், பிரியங்கா தேவி, தன் குழந்தையுடன் கால்வாய் செல்லும் திசையை நோக்கிச் செல்வது பதிவாகி இருந்தது. அவரிடம் போலீசார் விசாரித்தபோது, குழந்தையை கொன்றதை ஒப்புக் கொண்டார்.
ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் உள்ளனர். மூன்றாவதும் பெண் குழந்தையாக பிறந்ததால், குழந்தையை கால்வாயில் வீசிக் கொன்றதாக தெரிவித்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.