தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பிரசவத்தில் தாய் பலி: டாக்டர்கள் மீது புகார்

பிரசவத்தில் தாய் பலி: டாக்டர்கள் மீது புகார்

பிரசவத்தில் தாய் பலி: டாக்டர்கள் மீது புகார்


ADDED : அக் 20, 2025 06:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 20, 2025 06:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகல்கோட்: குழந்தை பிரசவித்த சில மணி நேரத்தில் மாரடைப்பால் தாய் உயிரிழந்தார். இதற்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் என, குடும்பத்தினர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெலகாவி மாவட்டம், ராமதுர்கா தாலுகாவின் அரெபென்சி கிராமத்தில் வசித்தவர் பூர்ணிமா, 23. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு, நேற்று முன் தினம் காலையில் பிரசவ வலி ஏற்பட்டது. அவரை குடும்பத்தினர் பாகல்கோட்டின் குமாரேஸ்வரா மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவருக்கு மதியம் 12:30 மணியளவில் சிசேரியன் எனும் மூலமாக பிரசவம் நடந்தது. அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இரவு 7:30 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதற்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் என பூர்ணிமாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது, டாக்டர்கள் வந்து பரிசோதித்து, சிகிச்சை அளிப்பதற்கு பதில், நர்சை அனுப்பி ஊசி போட வைத்துள்ளனர்.

சிறிது நேரத்தில் பூர்ணிமா துடிதுடித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து, பாகல்கோட் நகர் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டை டாக்டர்கள் மறுத்துள்ளனர். சிகிச்சை அளித்ததில் எந்த குளறுபடியும் நடக்கவில்லை என்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us