ADDED : ஆக 28, 2026 02:24 AM

துமகூரு: இன்றைய துணை முதல்வர் பரமேஸ்வர், உள் துறை அமைச்சராக இருந்த போது, அவரிடம் வீட்டுமனை கேட்ட பெண் ஒருவர், தன் இரண்டு பிள்ளைகளை, கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
துமகூரு மாவட்டம், சிரா புறநகரில் வசித்தவர் ராபியா பாஷா, 39. இவருக்கு தமன்னா, 9, என்ற மகள், சிம்ரான், 5, என்ற மகனும் உள்ளனர். இவர் மனை கேட்டு அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
கடந்த, 2025ல் பல்வேறு வளர்ச்சி பணிகளை துவக்கி வைக்க வந்த, அன்றைய முதல்வர் சித்தராமையாவிடம், தன் வேண்டுகோளை கூறினார். அதை ஏற்றுக்கொண்ட சித்தராமையா, மனை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முதல்வர் உத்தரவிட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்தும், மனை வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடித்தனர்.
இதனால் வெறுப்படைந்த ராபியா, அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த பரமேஸ்வர் மக்கள் குறை தீர்வு கூட்டத்துக்கு வந்து, அதிருப்தி தெரிவித்தார். முதல்வர் உத்தரவிட்டும், தனக்கு மனை கொடுக்கவில்லை என்றார். குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதியளிக்கும்படி, கோரிக்கை மனு கொடுத்தார்.
ராபியாவை அழைத்து பிரச்னையை கேட்டறிந்த பரமேஸ்வர், சிரா புறநகரில் மனை வழங்கினார். அங்கு வீடும் கட்டப்படுகிறது. இந்நிலையில் ராபியா, நேற்று அதிகாலை தன் மகனையும், மகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்தார். அதன்பின் அவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொ ண்டார்.
சிரா போலீசார் விசா ரிக்கின்றனர். துமகூரு எஸ்.பி., அசோக்குமார், நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.
