தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் திண்டாட்டம்

 சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் திண்டாட்டம்

 சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் திண்டாட்டம்


ADDED : மே 22, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2026 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் நேற்று மாலை பல பகுதிகளில் பெய்த கனமழையால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பணி முடித்து வீடு திரும்பிய மக்கள், தண்ணீர் தேங்கிய சாலையில் சிக்கி தவித்தனர்.

இந்திய வானிலை ஆய்வு மையம், பெங்களூரு நகரின் சில பகுதிகள், பெங்களூரு கிராமப்புற மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை, இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் கூறியிருந்தது.

அதற்கு ஏற்றபடி நேற்று மாலை பெங்களூரு நகரின் மீது கருமேகங்கள் சூழ துவங்கின. பல இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. மெஜஸ்டிக், எம்.ஜி., சாலை, காந்தி நகர், சிவாஜி நகர், ரிச்மண்ட் சதுக்கம், ஹலசூரு, இந்திரா நகர், ஆர்.டி., நகர், கே.ஆர்., சதுக்கம், கே.ஆர். மார்க்கெட், ஹெப்பால், மைசூரு சாலை, பழைய விமான நிலைய சாலை, பல்லாரி சாலை, ஜே.சி., சாலை, டவுன் ஹால், மல்லேஸ்வரம் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பல்லாரி சாலை, ரிச்மண்ட் சாலை, கே.ஜி.,சாலை, கே.ஆர்.,புரம், துமகூரு சாலை, மாகடி சாலை, மைசூரு சாலை, பன்னரகட்டா சாலை, கனகபுரா சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டவர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். பல இடங்களில் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்ததால், பயணியர் பாதித்தனர். வானிலை காரணமாக தற்காலிக மின் வெட்டு ஏற்பட்டுது. ஆங்காங்கே மரக்கிளைகள் விழுந்தன.

இதற்கிடையில், வானிலை ஆய்வு மையம், பயிர்களுக்கு சிறு சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மழையின் போது பொது மக்கள் முடிந்தவரை வீட்டிற்குள் இருக்குாறும், தேவையின்ற வெளியே செல்வதை தவிர்க்கவும்.

மரங்களின் கீழ் தஞ்சம் அடைய வேண்டாம். இடி மின்னலின் போது மின் கம்பங்கள் மற்றும் பிற பொருட்களில் இருந்து மக்கள் விலகி இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிமக்கள் மின்னணு சாதனங்களின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்' என எச்சரித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us