கடன் கொடுத்த மூதாட்டி கொலை; 2 பேர் கைது ஒருவர் தலைமறைவு
கடன் கொடுத்த மூதாட்டி கொலை; 2 பேர் கைது ஒருவர் தலைமறைவு
ADDED : ஜூன் 14, 2026 05:06 AM
சீனிவாசபுரா: வாங்கிய பணத்தை திருப்பி கேட்க சென்ற மூதாட்டியை கொலை செய்த சம்பவம் சீனிவாசப்பூரின் லட்சுமிபூரில் நடந்துள்ளது.
ரெட்டம்மா, 75, என்ற மூதாட்டியிடம் லட்சுமிபூர் கிராமத்தில் உள்ள திம்மராஜ், 50, அஞ்சலா,45.ஆகிய தம்பதி, முனிராஜ், 48. ஆகியோர் கடன் வாங்கி இருந்தனர்.
கொடுத்த கடனை திருப்பி கேட்க, ரெட்டம்மா மே 26ம் தேதி திம்மராஜ் வீட்டுக்கு சென்றார். அவர் வீடு திரும்பவில்லை.
இதனால், ரெட்டம்மாவின் குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். ஆனால் அவர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனால், அவரது குடும்பத்தினர் ஜூன் 1ம் தேதி சீனிவாசப்பூரின் ராயலபாடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரின் போது, ரெட்டம்மா பற்றிய தகவல்களை போலீசார் கேட்டனர். யாருக்கு அவர் கடன் கொடுத்துள்ளார் என்று விபரத்தையும் அறிந்தனர்.
அதில், லட்சுமிபூரில் திம்மராஜ், அஞ்சலா, முனிராஜ் பெயரும் தெரிய வந்துள்ளதால், அவர்களை விசாரிக்க போலீசார் சென்றனர். விசாரணையின் போது, திம்மராஜ், அஞ்சலா ஆகிய இருவரும் மூதாட்டியை கொன்றதை ஒப்புக் கொண்டனர். அவரது உடலை ஒரு பையில் மூட்டையாக கட்டி, சிக்கபல்லாபூர் மாவட்டம், சிந்தாமணியில் உள்ள கெஞ்சபள்ளி வனப்பகுதியில் வீசி எறிந்ததை கூறினர்.
இருவரையும் போலீசார் கைது செய்தனர். முனிராஜ், 48, தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
