தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஆர்.எஸ்.எஸ்., பற்றி பிரியங்க் விமர்சனம் மைசூரு எம்.பி., யதுவீர் கண்டனம்

 ஆர்.எஸ்.எஸ்., பற்றி பிரியங்க் விமர்சனம் மைசூரு எம்.பி., யதுவீர் கண்டனம்

 ஆர்.எஸ்.எஸ்., பற்றி பிரியங்க் விமர்சனம் மைசூரு எம்.பி., யதுவீர் கண்டனம்


ADDED : ஜூன் 11, 2026 10:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2026 10:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: ' ' அமைச்சர் பிரியங்க் கார்கே, சுய விளம்பரத்திற்காகவே ஆர்.எஸ்.எஸ்., குறித்து விமர்சிக்கிறார்,'' என, பா.ஜ., - எம்.பி., யதுவீர் குற்றறஞ்சாட்டினார்.

மைசூரு பா.ஜ., அலுவலகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:

நாட்டின் கலாசாரத்தை காப்பாற்றும் வேலையை, ஆர்.எஸ்.எஸ்., செய்கிறது. இந்த அமைப்பை நாட்டு மக்களே பாராட்டுகின்றனர். ஆனால், அமைச்சர் பிரியங்க் கார்கே, சுய விளம்பரத்திற்காக ஆர்.எஸ்.எஸ்., பற்றி விமர்சிக்கிறார்.

நரேந்திர மோடி பிரதமராக, 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இப்போதும் மக்களுக்காக பணியாற்றுகிறார். வல்லரசு நாடாக்க அஸ்திவாரம் போட்டுள்ளார்.

மோடி பிரதமராவதற்கு முன், நாட்டின் பொருளாதார சூழ்நிலை சரியாக இல்லை. இப்போது பொருளாதாரத்தில் நாடு முன்னணியில் உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவுக்கு வருகின்றன.

நாட்டின், 25 கோடி மக்கள், வறுமை கோட்டில் இருந்து வெளியே வந்துள்ளனர். நாடு முழுவதும் ஏழைகள் எண்ணிக்கை, 29 சதவீதத்தில் இருந்து, 11 சதவீதமாக குறைந்துள்ளது. இது, மோடி அரசின் சாதனை.

கிசான் சம்மான் திட்டத்தி ன் மூலம், விவசாயிகளின் கணக்குக்கு நேரடியாக 6,000 ரூபாய் செல்கிறது. இத்திட்டத்துக்கு 4.5 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

பெண்களின் சுய உ தவிக்குழுக்களுக்கு, கடனுதவி வழங்கப்படுகிறது. இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. உள்நாட்டு உற்பத்திகளுக்கு, வெளி நாடுகளில் டிமாண்ட் அதிகரித்துள்ளது. உலக அளவில் இந்தியாவுக்கு, பெரிய கவுரவம் கிடைக்கிறது. இதுவும் மோடி அரசின் சாதனை.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதன் மூலம், நாட்டு மக்களின் கனவை மோடி நனவாக்கினார். 500 ஆண்டுகள் விவாதத்தை தீர்த்து வைத்தார். யோகாவை உலகத்துக்கே அறிமுகம் செய்தார். டிஜிடல் இந்தியா உட்பட, பல திட்டங்களை செயல்படுத்தினார்.

நாட்டில் நக்சல் பாதிப்பு, முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டது. விதிமுறை 370 ரத்து செய்து, ஜம்மு -காஷ்மீர் பிரச்னையை சரி செய்தார். நாட்டில் தற்போது மக்கள் கணக்கெடுப்பு, ஜாதி கணக்கெடுப்பு நடக்கிறது. இதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறோம். அவரது விருப்பப்படி நாங்கள் பணியாற்றுகிறோம்,

இதற்கு முன் முதல்வராக இருந்த சித்தராமையா, மத்திய அரசின் மீது குற்றம்சாட்டும் வேலையை செய்தா ர். புதிய முதல்வர் சிவகுமாராவது, மக்களின் நலனில் அக்கறை காட்டட்டும். ஜி.எஸ்.டி., கூட்டத்திலும், சித்தராமையாபங்கேற்றது இல்லை. காவிரி நதி நீர் விவாதம் விஷயத்திலும், வாய் திறக்கவில்லை.

மேகதாது திட்டம் விஷயத்தில், தமிழக முதல்வர் விஜய், பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். அதிகமாக மழை பெய்து, தமிழகத்துக்கு தேவையான அளவில் தண்ணீர் திறந்து விடும் சூழ்நிலை உருவாக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us