/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
விருந்தோம்பலில் அசத்தும் மைசூரு பெண்
/
விருந்தோம்பலில் அசத்தும் மைசூரு பெண்
ADDED : ஜன 05, 2026 06:21 AM

- நமது நிருபர் -:
அரண்மனை நகரம் என அழைக்கப்படும் மைசூரை சுற்றிப்பார்க்க, தினமும், நுாற்றுக்கணக்கான வெளிநாட்டினர், வருகை தருகின்றனர். அவர்களில், சிலர் மைசூரிலே தங்கி, அரண்மனை, கோவில், போர் சின்னங்கள் போன்றவற்றை நேரிலே பார்த்து ரசிப்பர். மேலும், பாரம்பரிய உணவு வகைகளையும் சாப்பிட்டு மகிழ்வர்.
இவர்களுக்கு, சுவையான உணவுகள் வழங்குவது, சுற்றுலா தலங்கள் குறித்து அறிவுரை வழங்குவது மற்றும் பாரம்பரிய விஷயங்கள் குறித்து எடுத்துரைக்கும் பணியை சசிகலா, 38, செய்து வருகிறார். இவர், வெளிநாட்டினரும் அன்பாக பழகக்கூடியவர்.
இவரது விருந்தோம்பலை பார்த்து, பல வெளிநாட்டினர் ஆச்சரியப்பட்டு உள்ளனர். திகைத்து உள்ளனர்.
இவர், மைசூரு சில்க் புடவை, மல்லிகை பூ குறித்தும் அவர்களுக்கு எடுத்துரைக்கிறார். தனது வீட்டில் செய்த உணவை, வாழை இலையில் வைத்து பரிமாறுகிறார். இவரது கைப்பக்குவத்திற்கு பலரும் அடிமையாகி விடுகின்றனர். அவர்களுக்கு புடவை கட்டியும் அழகு பார்க்கிறார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
என்னிடம் வெளிநாட்டினர்கள் பலரும் அன்பாக பழகுகின்றனர். அவர்கள் என்னுடைய மொபைல் எண்ணை வாங்கிச் செல்கின்றனர். அவர்களின் நாட்டுக்கு சென்று கூட, எனக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். சிலர், என்னுடைய பெயரை மறந்தாலும், நான் சமைத்து கொடுத்த உணவுகளின் பெயரை மறப்பதில்லை. இது, எனக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன். அதனால், சமையலின் போது நான் இன்னும் கவனமாக இருக்கிறேன்.பலரும் என்னுடைய வீட்டில் தங்குவதற்கு ஆசைப்படுகின்றனர். இது, எனக்கு கிடைத்த பாக்கியம். நம் நாட்டின் பிரதிநிதியாக அவர்கள் வரவேற்கிறேன். என்னுடைய பணியை நான் சரியாக செய்வதாக நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
விருந்தோம்பலுக்கு பெயர் போன நம் நாட்டின் பெருமையை, உலக அரங்கில் எடுத்து செல்லும் முயற்சியில் சசிகலா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

