ADDED : ஜன 20, 2026 06:21 AM
ஹூப்பள்ளி: பட்டப்படிப்பு படிக்கும் கல்லுாரி மாணவர், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனால், கல்லுாரியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கொப்பால் மாவட்டத்தை சேர்ந்தவர் அயான் சுங்கத், 19. இவர் ஹூப்பள்ளி நகரின் பைரிகொப்பாவில் உள்ள சனா கல்லுாரியில் பட்டப் படிப்பு படித்து வந்தார். கல்லுாரி விடுதியில் தங்கியிருந்தார். விடு முறை நாட்களில் சொந்த ஊருக்கு சென்று வருவார்.
நேற்று முன்தினம் இரவு சாப்பிட்ட மாணவர் அயான் சுங்கத், தன் அறைக்கு உறங்கச் சென்றார். இந்நிலையில் நேற்று காலை, விடுதியின் மூன்றாவது மாடியின் கீழ்ப்பகுதியில் விழுந்து கிடந்தார். இதைக்கண்ட மாணவர்கள், விடுதி ஊழியர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்த போது, அயான் சுங்கத் இறந்து விட்டது தெரியவந்தது.
உடன டியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த ஹூப்பள்ளி ஊரக போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மாணவர்கள், விடுதி ஊழியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் உட்பட, அனைவரிடமும் விசாரணையை துவக்கியுள்ளனர்.
மாணவர் சந்தேகத்திற்கிடமாக இறந்ததால், கல்லுாரியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

