தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நாகேந்திராவுக்கு மீண்டும் சிக்கல்; கவர்னருக்கு சி.பி.ஐ., கடிதம்

 நாகேந்திராவுக்கு மீண்டும் சிக்கல்; கவர்னருக்கு சி.பி.ஐ., கடிதம்

 நாகேந்திராவுக்கு மீண்டும் சிக்கல்; கவர்னருக்கு சி.பி.ஐ., கடிதம்


ADDED : ஆக 22, 2026 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 01:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில், அமைச்சர் நாகேந்திராவுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கை முறைப்படி விசாரிக்க அனுமதி கேட்டு, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிற்கு, சி.பி.ஐ., கடிதம் எழுதியுள்ளது.

கர்நாடக திட்டம் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சர் நாகேந்திரா. இவர், சித்தராமையா அமைச்சரவையில் பழங் குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்தார். அந்த துறைக்கு உட்பட்ட வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில், 187 கோடி ரூபாய் முறைகேடு வழக்கில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

பணம் சட்ட விரோத பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் நாகேந்திராவை அமலாக்கத்துறை கைது செய்தது. சி.பி.ஐ.,வையும் இந்த வழக்கை விசாரிக்கிறது.

நாகேந்திரா மீது இரு விசாரணை அமைப்புகளும் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தன. தற்போது ஜாமினில் இருக்கும் நாகேந்திரா அமைச்சராக உள்ளார்.

இந்நிலையில், சி.பி.ஐ., நீதிமன்றத்தில் உள்ள வழக்கை முறைப்படி விசாரிக்க அனுமதி கேட்டு, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிற்கு, சி.பி.ஐ., கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதம் ஒரு வாரத்திற்கு முன் எழுதப்பட்டாலும், கடிதத்தின் மீது இதுவரை கவர்னர் எந்த முடிவும் சொல்லவில்லை.

வழக்கை விசாரிக்க கவர்னர் ஒப்புதல் அளித்தால், நாகேந்திராவுக்கு சிக்கலாக மாறும் வாய்ப்புள்ளது.

நாகேந்திராவின் ராஜினாமாவை கேட்கும் எதிர்க்கட்சிகளை வெறுப்பேற்றும் வகையில், அவருக்கு கூடுதல் துறையை அரசு ஒதுக்கியுள்ளது. அதுவும் மிக முக்கியமான, கல்யாண கர்நாடகா மேம்பாட்டு துறை.

பொருளாதார, கல்வி, சமூக ரீதியாக பின்தங்கிய கலபுரகி, பீதர், ராய்ச்சூர், கொப்பால், யாத்கிர், பல்லாரி, விஜயநகரா ஆகிய ஏழு மாவட்டங்களை வளர்ச்சி அடைய செய்வதே, இந்த துறையின் முக்கிய வேலை. இந்த துறைக்கு ஆண்டிற்கு, 5,000 கோடி ரூபாய் அரசு ஒதுக்குவது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us