தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/‘நந்தினி பால் பவுடர் 100 சதவீதம் பாதுகாப்பானது’

‘நந்தினி பால் பவுடர் 100 சதவீதம் பாதுகாப்பானது’

‘நந்தினி பால் பவுடர் 100 சதவீதம் பாதுகாப்பானது’


UPDATED : அக் 13, 2026 12:08 AM

ADDED : அக் 13, 2026 12:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 12:08 AM ADDED : அக் 13, 2026 12:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடகத்தின் நந்தினி பால் பவுடர் பாதுகாப்பானது என எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

கர்நாடகாவின் நந்தினி பால் பவுடரில் கலப்படம் செய்யப்படுவதாக எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,க்கு புகார் சென்றது. இதையடுத்து, செப்., 26ம் தேதியன்று கர்நாடக பால் கூட்டமைப்பின் பால் பண்ணைகளில் இருந்து பால் பவுடர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த மாதிரிகள் பரிசோதனைக்காக எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,க்கு அனுப்பி வைக்கப்பட்டன.

எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அறிக்கையில், ‘ஆய்வுக்காக சேகரிக்கப்பட்ட மாதிரிகளில், பாதுகாப்பு பிரச்னைகள் எதுவும் கண்டறியப்படவில்லை. 100 சதவீதம் பாதுகாப்பானது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us