sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

சுற்றுலா

/

 சூரியன் உதயம், அஸ்தமனத்தை ரசிக்க நரசிம்ம பர்வதா மலை

/

 சூரியன் உதயம், அஸ்தமனத்தை ரசிக்க நரசிம்ம பர்வதா மலை

 சூரியன் உதயம், அஸ்தமனத்தை ரசிக்க நரசிம்ம பர்வதா மலை

 சூரியன் உதயம், அஸ்தமனத்தை ரசிக்க நரசிம்ம பர்வதா மலை


ADDED : டிச 11, 2025 06:00 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -:

சிக்கமகளூரு மாவட்டம், சிருங்கேரியில் இருந்து 18 கி.மீ., தொலைவிலும், ஆகும்பேயில் இருந்து 20 கி.மீ., தொலைவிலும் நரசிம்ம பர்வதா மலை அமைந்து உள்ளது. 3,780 அடி உயரம் கொண்ட இம்மலை, அடர்ந்த மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் அமைந்து உள்ளது. குத்ரேமுக் தேசிய பூங்காவின் சோமேஸ்வரா வனவிலங்கு சரணாலயத்திற்குள் இம்மலை வருகிறது. தென்மாநிலத்தின் 'சிரபுஞ்சி' என்று அழைக்கப்படும் ஆகும்பேயின் மல்லந்துாரில் இருந்து மலையேற்றம் துவங்குகிறது.

10வது உயர நீர்வீழ்ச்சி முதல் எட்டு கி.மீ., அடர்ந்த வனப்பகுதிக்குள் நடந்து செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் போது, 850 அடி உயரத்தில் இருந்து 'சீதா ஆறு' நீர்வீழ்ச்சியை காணலாம். இது, இந்தியாவின் 10வது உயரமான நீர்வீழ்ச்சியாகும்.

இங்கிருந்து மேலும் இரண்டு கி.மீ., அடர்ந்த வனப்பகுதி வழியாக நடந்து செல்ல வேண்டும். இதை கடந்தால், புற்கள் நிறைந்த நரசிம்ம பர்வதா மலையை பார்க்கலாம்.

அங்கிருந்து மூன்று கி.மீ., நடந்து சென்றால், மலையின் உச்சியை அடையலாம். மல்லந்துார் பகுதியில் துவங்கும் அடர்ந்த வனப்பகுதியில் வழிகாட்டியுடன் செல்வது நல்லது.

மழைக்காலத்துக்கு பின் இங்கு ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள் அதிகம் இருக்கும். சீதா நீர்வீழ்ச்சி செல்லும் வரை ஓய்வெடுக்க முடியாது. எனவே, மழைக்காலத்துக்கு முன்னதாக செல்வது நல்லது.

மற்றொரு வழித்தடம், சிருங்கேரியின் கிக்காவில் இருந்து துவங்குகிறது. இங்கிருந்து ஆறு கி.மீ., தொலைவில் உள்ள மலையை அடைந்து விடலாம். முதல் ஒரு கி.மீ., நேராகவும், மண் சாலையாகவும் இருப்பதால் சுலபமாக கடந்து சென்று விடலாம்.

அதன்பின், இரண்டு கி.மீ., அடர்ந்த வனப்பகுதிக்குள் பயணிக்க வேண்டும். மல்லந்துார் வழித்தடம் போன்று இல்லாமல், சுலபமாக மலைக்கு செல்லலாம். இதற்கு வழிகாட்டி தேவைப்படாது.

முதன் முறை மீதமுள்ள மூன்று கி.மீ., மலையை சுலபமாக ஏறி கடந்து சென்றுவிடலாம். மல்லந்துாரை ஒப்பிடும் போது, முதன் முறையாக மலையேற்றம் செய்வோருக்கு இது சரியானதாக இருக்கும்.

அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்வதால், உயரமான மரங்கள், சூரிய ஒளியை உள்ளே விடாமல் தடுக்கும். இதனால் கடுமையான வெப்பத்தில் இருந்து தப்பிக்கலாம். மலையின் உச்சியில் தங்கி, சூரிய அஸ்தமனத்தையும், மறுநாள் காலையில் சூரிய உதயத்தையும் கண்டு ரசிக்கலாம்.

11_Article_0001, 11_Article_0002 உயரமான மரங்கள். (அடுத்த படம்) நரசிம்ம பர்வதா மலையில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகிய காட்சி

எப்படி செல்வது?

▶ பெங்களூரில் இருந்து ரயிலில் செல்வோர் உடுப்பி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 50 கி.மீ., தொலைவில் உள்ள ஆகும்பே செல்லலாம். அங்கிருந்து 18 கி.மீ., தொலைவில் உள்ள மல்லந்துாருக்கு பஸ், ஆட்டோவில் செல்லலாம்.

▶ பஸ்சில் செல்வோர், ஆகும்பே பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 18 கி.மீ., தொலைவில் உள்ள மல்லந்துாருக்கு பஸ், ஆட்டோவில் செல்லலாம்.

▶ அவசர உதவிக்கு: 081812 33224.






      Dinamalar
      Follow us