தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிறுத்தை தாக்கி தேசிய பூங்கா ஊழியர் காயம்

 சிறுத்தை தாக்கி தேசிய பூங்கா ஊழியர் காயம்

 சிறுத்தை தாக்கி தேசிய பூங்கா ஊழியர் காயம்


ADDED : பிப் 14, 2026 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு பன்னரகட்டா தேசிய பூங்காவில், சாந்தப்பா என்பவர், 25 ஆண்டுகளாக பணியாற்றுகிறார். இங்குள்ள விலங்குகளை பராமரிப்பது, கூண்டுகளை சுத்தம் செய்வது போன்ற பணிகளை செய்து வந்தார்.

நேற்று காலை, 8:30 மணியளவில், அவர் கூண்டுகளை சுத்தம் செய்தார். அப்போது, சிறுத்தை ஒன்று, அவர் மீது பாய்ந்து தாக்கியது. இதில், அவரது கழுத்து, முகத்தில் காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சம்பவ இடத்தை உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சாந்தப்பாவை இதற்கு முன், காட்டெருமை தாக்கி காயப்படுத்தியது. 25 ஆண்டுகளாக பணியாற்றியும், அவரது பணியை நிரந்தரமாக்கவில்லை. இனியாவது அவரது பணியை நிரந்தரமாக்கும்படி, அவரது மனைவி ஜெயம்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us