தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நேபாள பெண்கள் தற்கொலை வழக்கு ஓரினச்சேர்க்கை விவகாரம் காரணம் 

 நேபாள பெண்கள் தற்கொலை வழக்கு ஓரினச்சேர்க்கை விவகாரம் காரணம் 

 நேபாள பெண்கள் தற்கொலை வழக்கு ஓரினச்சேர்க்கை விவகாரம் காரணம் 

1


ADDED : ஆக 08, 2026 07:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2026 07:01 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எலஹங்கா: ஒரே மரத்தில் நேபாள இளம்பெண்கள் இருவர் துாக்கிட்டு தற்கொலை செய்த வழக்கில், ஓரினச்சேர்க்கை விவகாரமே காரணம் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் ஸ்ரீஜனா, 22, ரீதா, 22. இவர்கள் இருவரும், முறையே பெங்களூரு பிரேசர் டவுன், ஜக்கூரில் வசித்தனர். அடுக்குமாடி குடியிருப்பில் சமையல் வேலை செய்தனர். கடந்த 5ம் தேதி இரவு ஜக்கூர் பகுதியில் ஒரே மரத்தில் இருவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

நேற்று முன்தினம் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன. உடல்கள் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து 2 கி.மீ., துாரத்தில் உள்ள, ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவரும் இறந்து கிடந்தார். இது, போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பியது.

தற்கொலை செய்த பெண்களுக்கும், இறந்து கிடந்த வாலிபருக்கும் என்ன தொடர்பு என்று விசாரித்த போது, இவர்களுக்குள் எந்த தொடர்பும் இல் லை என்பது தெரிந்தது.

பெங்களூரில் வசிக்கும் ஸ்ரீஜனா, ரீதா உறவினர்கள் சிலரிடம் விசாரித்த போது, இருவரின் தற்கொலைக்கான காரணம் தெரிந்தது. அதாவது ஸ்ரீஜனாவும், ரீதாவும் உறவினர்கள் ஆவர். சில மாதங்களுக்கு முன் பெங்களூரு வந்தனர். ஒருவரையொருவர் காதலித்தனர். ஓரினச்சேர்க்கையிலும் ஈடுபட்டனர்.

இவர்களின் விவகாரம் இ ரு குடும்பத்தினருக்கும் தெரிந்ததால் கண்டித்தனர். இருவருக்கும் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்தன.

ஓரினச்சேர்க்கையாளர்களான தங்களை பெற்றோர் பிரிந்து விடுவர் என்ற பயத்தில், வீட்டில் இருந்து வெளியேறி இருவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us