/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மெக்கான் மருத்துவமனையில் புதிய பிரிவுகள் துவக்கம்
/
மெக்கான் மருத்துவமனையில் புதிய பிரிவுகள் துவக்கம்
ADDED : செப் 10, 2025 02:05 AM

ஷிவமொக்கா : ஷிவமொக்காவின் மெக்கான் மருத்துவமனையில், பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட, எட்டு பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன. இப்பிரிவுகள் திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மருத்துவமனை அதிகாரி திம்மப்பா கூறியதாவது:
ஷிவமொக்கா மாவட்டத்தின், சுற்றுப்புற மாவட்ட மக்கள், தங்களின் சிகிச்சைக்காக மெக்கான் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நம்பியுள்ளனர். இங்கு சில மருத்துவ சேவைகள் விரிவடைந்துள்ளன.
தனியார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில், பிளாஸ்டிக் சர்ஜரி, இதயம் சம்பந்தப்பட்ட சிகிச்சைகளுக்கு, மிக அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. லட்சக்கணக்கான ரூபாய் செலவிட்டு, சிகிச்சை பெற ஏழை நோயாளிகளுக்கு, சக்தி இருக்காது.
இவர்களுக்கு குறைந்த கட்டணத்தில், தரமான சிகிச்சைகள் கிடைக்க வேண்டும் என்பது, அரசின் குறிக்கோளாகும்.இதை கருத்தில் கொண்டு, ஷிவமொக்காவின் மெக்கான் மருத்துவ மனையில், இதய சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரி, நரம்பியல், சிறுநீரகவியல், குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை உட்பட, எட்டு பிரிவுகள் துவக்கப்பட் டுள்ளன.
வாரந்தோறும் திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில், இந்த சேவைகள் கிடைக்கும்.
அன்றைய தினம் சிறப்பு வல்லுநர்கள், மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை அளிப்பர். மெக்கான் மருத்துவமனை, 950 படுக்கை திறன் கொண்டது. தினமும் 95 சதவீதம் நோயாளிகள், உள்நோயாளிகளாக சேர்கின்றனர். 2,000 முதல் 3,000 நோயாளிகள் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். தரமான சிகிச்சை கிடைக்கிறது.
மாதந்தோறும் 1,750 முக்கிய அறுவை சிகிச்சைகளும், 2,000 சிறிய அறுவை சிகிச்சைகளும் நடக்கின்றன. 1,200 டயாலிசிஸ் நடக் கிறது. 750 பிரசவங்கள் நடக்கின்றன.
பெங்களூரு, மைசூரு, ஹூப்பள்ளியை தவிர, ஷிவமொக்காவின், மெக்கான் மருத்துவமனையில் அதிநவீன அறுவை சிகிச்சை வசதிகள் உள்ளன. குறைந்த கட்டணத்தில் சிகிச்சை கிடைக்கிறது. பி.பி.எல்., கார்டுதாரர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறி னார்.