/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தாழ்வான பகுதியில் 'பார்க்கிங்' தடுக்க வருகிறது புதிய சட்டம்
/
தாழ்வான பகுதியில் 'பார்க்கிங்' தடுக்க வருகிறது புதிய சட்டம்
தாழ்வான பகுதியில் 'பார்க்கிங்' தடுக்க வருகிறது புதிய சட்டம்
தாழ்வான பகுதியில் 'பார்க்கிங்' தடுக்க வருகிறது புதிய சட்டம்
ADDED : மே 21, 2025 03:04 AM

பெங்களூரு : 'அடுக்குமாடி குடியிருப்புகளில் தாழ்வான பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டப்படுவதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும்,'' என்று, துணை முதல்வர் சிவகுமார் கூறினார்.
பெங்களூரில் கடந்த 18 ம் தேதி இரவு பெய்த கனமழையால், கோரமங்களா, பி.டி.எம்., லே - அவுட், ஹெச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட் உள்ளிட்ட பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங் பகுதியில் வெள்ளம் புகுந்தது.
பி.டி.எம்., லே - அவுட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங்கில் புகுந்த தண்ணீரை மின்மோட்டார் மூலம் அகற்ற முயன்ற காவலாளி மனோகர், 55, தினேஷ், 9 ஆகியோர் மின்சாரம் தாக்கி இறந்தனர். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு துணை முதல்வர் சிவகுமார் நேற்று ஆறுதல் கூறினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
அடுக்குமாடி குடியிருப்பில் தாழ்வான பகுதிகளில் பார்க்கிங் கட்டப்படுவதால், மழை நேரத்தில் பார்க்கிங்கில் தண்ணீர் புகுந்து வாகனங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் இனி அடுக்குமாடி குடியிருப்பில் தாழ்வான பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் கட்ட கூடாது. இதனை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும்.
மழைக்கு இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். பெங்களூரில் 1.40 கோடி மக்கள் தொகை உள்ளது. மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பொதுமக்கள் போன் அழைப்பை எடுக்கவில்லை என்று ஊடகத்தினர் கூறுகின்றனர். மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து அதிகாரிகள் எப்படி வேலை செய்கின்றனர் என்று பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.