/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி புதிய திட்டம்
/
தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி புதிய திட்டம்
தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி புதிய திட்டம்
தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி புதிய திட்டம்
ADDED : ஜூலை 27, 2025 05:04 AM
பெங்களூரு:தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப் படுத்த புதிய திட்டத்தை பெங்களூரு மாநகராட்சி கொண்டு வந்துள்ளது.
பெங்களூரு நகரில் தெரு நாய்கள் அட்டகாசத்தை தடுக்க, 5,000 தெரு நாய்களுக்கு கோழிக் கறியுடன் உணவு அளிக்கும் திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்துவதாக மாநகராட்சி அறிவித்தது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியுள்ளது.
இதைத் தொடர்ந்து, தெரு நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த புதிய திட்டத்தை மாநகராட்சி கொண்டு வந்துள்ளது. இதன்படி, கால்நடை பராமரிப்புத் துறை மூலம், ஒரு குழு உருவாக்கப்படும். இக்குழுவில், கால்நடை மருத்துவர்கள், விலங்கு ஆர்வலர்கள் ஆகியோர் இடம் பெற்றிருப்பர். இது போன்ற குழுக்கள், ஒவ்வொரு மண்டலத்திலும் அமைக்கப்படும்.
தெரு நாய்கள் எண்ணிக்கை, அதிகரிப்புக்கான காரணம், தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்கள் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கிட்டு அறிக்கை சமர்ப்பிப்பர். இந்த அறிக்கையை வைத்து, தெரு நாய்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி எடுக்கும்.