/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'லேடிஸ் பார்'களில் விதிமீறல் போலீஸ் துறை புதிய உத்தரவு
/
'லேடிஸ் பார்'களில் விதிமீறல் போலீஸ் துறை புதிய உத்தரவு
'லேடிஸ் பார்'களில் விதிமீறல் போலீஸ் துறை புதிய உத்தரவு
'லேடிஸ் பார்'களில் விதிமீறல் போலீஸ் துறை புதிய உத்தரவு
ADDED : ஜூலை 05, 2025 10:57 PM
பெங்களூரு: லேடிஸ் பார்களில் விதிகளை மீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை கட்டுப்படுத்த, போலீஸ் துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூரின், பல்வேறு இடங்களில் லேடிஸ் பார்கள் செயல்படுகின்றன. இவை எந்த விதிகளையும் பின்பற்றுவது இல்லை. நள்ளிரவு தாண்டியும் வாடிக்கையாளர்களுக்கு அனுமதி அளிக்கின்றனர்.
அரை குறையாக உடையணிந்த இளம்பெண்கள், வாடிக்கையாளர்களுக்கு உணவு, மதுபானம் வழங்குவதாகவும், ஆபாச நடனமாடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீசாரும் அவ்வப்போது பார்களில் திடீர் சோதனை நடத்துகின்றனர். விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக எச்சரிக்கின்றனர். ஆனால் பார் உரிமையாளர்கள் பொருட்படுத்தவில்லை.
பார்களுக்கு சீல் வைப்பதாக மிரட்டியும் பயன் இல்லை. இப்போதும் விதிகள் மீறப்படுகின்றன. இத்தகைய பார்களுக்கு பாடம் புகட்ட, போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக அனைத்து பார்களுக்கும் போலீசார் அனுப்பிய புதிய வழிகாட்டு நெறிமுறை வருமாறு:
லேடிஸ் பார்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் வீடியோ துணுக்குகளை, தினமும் அந்தந்த எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையத்தில் பார் உரிமையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
பென் டிரைவ் அல்லது சி.டி.,க்களில் வீடியோக்களை பதிவு செய்து, போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த வீடியோக்களை போலீசார் ஆய்வு செய்வர். விதிகளை மீறுவது தெரிந்தால், தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, போலீசார் எப்போதாவது ஒருமுறை பார்களின் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்வர். வீடியோ பதிவுகளை அவர்கள் பார்ப்பதற்குள், அதில் உள்ள காட்சிகளை பார் ஊழியர்கள் அழித்து விடுகின்றனர்.
இனி அப்படி செய்ய முடியாது. அன்றாடம் பதிவாகும் வீடியோக்களை. போலீஸ் துறைக்கு அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பார்களில் நடக்கும் நிகழ்வுகளை கண்காணிப்பது, போலீசாரின் எண்ணமாகும்.