/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புலம் பெயர் தொழிலாளர்கள் பதிவின்மையால் புதிய பிரச்னை
/
புலம் பெயர் தொழிலாளர்கள் பதிவின்மையால் புதிய பிரச்னை
புலம் பெயர் தொழிலாளர்கள் பதிவின்மையால் புதிய பிரச்னை
புலம் பெயர் தொழிலாளர்கள் பதிவின்மையால் புதிய பிரச்னை
ADDED : ஏப் 19, 2025 11:12 PM
பெங்களூரு: கர்நாடகாவில் பிற மாநிலங்களை சேர்ந்த ஐந்து லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளதாகவும், 46,000 பேர் மட்டும் முறைப்படி பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகாவில், பிற மாநிலங்களில் இருந்து கட்டட வேலை, உணவக வேலை உள்ளிட்ட கூலி வேலைகளுக்காக வரும் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஹூப்பள்ளியில், சில நாட்களுக்கு முன்பு, ஐந்து வயது சிறுமி, பீஹாரின் கூலித்தொழிலாளியால் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
இது போன்ற சம்பவங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஈடுபடுவதாக, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியிருந்தார்.
குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்படுகிறது. அவர்கள் குறித்த தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இத்தகையோர் முறையாக தொழிலாளர் நலத்துறையிடமோ, சம்பந்தப்பட்ட வாரியங்களிலோ பதிவு செய்வதில்லை.
இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உள்துறை அமைச்சகம், தொழிலாளர் நலத்துறையிடம் கூறியது.
இதையடுத்து, தொழிலாளர் நலத்துறையின் கீழ் உள்ள, கர்நாடக கட்டட மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர் ஆணையம், மாநிலத்தில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பை துவக்கியது.
அறிக்கையின்படி, மாநிலத்தில் ஐந்து லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 46,000 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். அதுவும், இரண்டு ஆண்டுகளில் மட்டுமே பதிவு நடந்துள்ளது.
எனவே, பதிவு செய்யப்படாத பிற மாநிலங்களை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பின்னணி, ஆதார் அட்டை தகவல்களை சேகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக, 43 நடமாடும் வேன்கள் தயார் செய்யப்பட உள்ளது. தொழிலாளர்கள் தங்கி இருக்கும் இடங்களுக்கு சென்று கணக்கெடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.