/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கன்னட ராஜ்யோத்சவா விருதுக்கு விண்ணப்பிக்க புதிய நடைமுறை
/
கன்னட ராஜ்யோத்சவா விருதுக்கு விண்ணப்பிக்க புதிய நடைமுறை
கன்னட ராஜ்யோத்சவா விருதுக்கு விண்ணப்பிக்க புதிய நடைமுறை
கன்னட ராஜ்யோத்சவா விருதுக்கு விண்ணப்பிக்க புதிய நடைமுறை
ADDED : அக் 09, 2025 11:00 PM

பெங்களூரு: கன்னட ராஜ்யோத்சவாவை முன்னிட்டு வழங்கும் விருதுக்கு, ஆன்லைன் வழியாக விண்ணப்பம் பெறப்படாது என, அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கன்னடம், கலாசாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகிகூறியதாவது:
இம்முறை 70வது கன்னட ராஜ்யோத்சவா கொண்டாடப்படும். இதை முன்னிட்டு, 70 சாதனையாளர்களுக்கு கன்னட ராஜ்யோத்சவா விருது வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.
கடந்தாண்டு விருது பெற விரும்பும் சாதனையாளர்கள், ஆன்லைன் வழியாக சேவா சிந்து இணையதளத்தில் விண்ணப்பிக்க, அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இம்முறை ஆன்லைனில் விண்ணப்பிக்க அனுமதி இருக்காது. கன்னடம், கலாசாரத்துறை அலுவலகத்துக்கு நேரில் வந்து, விண்ணப்பம் அளிக்க வேண்டும்.
ராஜ்யோத்சவா விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய ஆலோசனை கமிட்டியை, கன்னடம், கலாசாரத்துறை அமைத்துள்ளது.
விருது கோரி வரும் விண்ணப்பங்களை, இக்கமிட்டியிடம் ஒப்படைப்போம். கமிட்டியினர் ஆய்வு செய்து, 70 சாதனையாளர்களை தேர்வு செய்வர். கடந்த முறை ராஜ்யோத்சவா விருதுக்கு, 1,500க்கும் மேற்பட்டோரும் நேரில் 100க்கும் மேற்பட்டோரும் விண்ணப்பித்திருந்தனர்.
பல்வேறு துறைகளின் சாதனையாளர்கள், சங்கங்கள், அமைப்புகள் விண்ணப்பித்தன. இம்முறையும் விண்ணப்பங்கள் வர துவங்கியுள்ளன.
ராஜ்யோத்சவா விருது, ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கம், 25 கிராம் தங்கப்பதக்கம், சான்றிதழ், சால்வை, நினைவு கேடயம் உட்கொண்டதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.