/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சித்தராமையா மீதான 'முடா' வழக்கில் நீதிமன்றத்தில் புதிய அறிக்கை தாக்கல்
/
சித்தராமையா மீதான 'முடா' வழக்கில் நீதிமன்றத்தில் புதிய அறிக்கை தாக்கல்
சித்தராமையா மீதான 'முடா' வழக்கில் நீதிமன்றத்தில் புதிய அறிக்கை தாக்கல்
சித்தராமையா மீதான 'முடா' வழக்கில் நீதிமன்றத்தில் புதிய அறிக்கை தாக்கல்
ADDED : நவ 15, 2025 11:10 PM
பெங்களூரு: முதல்வர் சித்தராமையா மீதான 'முடா' வழக்கில், நீதிமன்றத்தில் புதிய அறிக்கையை, லோக் ஆயுக்தா சமர்ப்பித்துள்ளது.
'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 56 கோடி ரூபாய் மதிப்பிலான 14 வீட்டுமனை வாங்கியதாக, முதல்வர் சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்தது. சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா அளித்த புகாரில், சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய, லோக் ஆயுக்தாவுக்கு பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நால்வர் மீது வழக்குப்பதிவானது. இவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்றும், நீதிமன்றத்தில், லோக் ஆயுக்தா 'பி' அறிக்கை தாக்கல் செய்தது.
ஆனாலும் வீட்டுமனை ஒதுக்கியதில் அதிகாரிகள் செய்த தவறு குறித்து, விசாரிக்க உத்தரவிடும்படி, நீதிமன்றத்தில், சிநேகமயி கிருஷ்ணா மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணை நடத்திய லோக் ஆயுக்தா போலீசார், வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை நேற்று, நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தனர்.
இதன் பிரதியை, மனுதாரர் சிநேகமயி கிருஷ்ணாவுக்கு கொடுத்தனர். வழக்கின் முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய, அரசு தரப்பு கூடுதல் அவகாசம் கேட்டது. இதையடுத்து மனு மீதான அடுத்த விசாரணையை, டிசம்பர் 4ம் தேதிக்கு, நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் ஒத்திவைத்தார்.

