/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடக சிறைகளில் புதிய கட்டுப்பாடுகள்
/
கர்நாடக சிறைகளில் புதிய கட்டுப்பாடுகள்
ADDED : ஜன 25, 2026 05:10 AM
பெங்களூரு: சிறையில் விசாரணை கைதிகளுக்கு உணவு, உடைகள் வழங்குவதில், சிறை துறை டி.ஜி.பி., அலோக் குமார் புதிய கட்டுப்பாடுகளை விதித்து, சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளார்.
சுற்றறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
மாநிலத்தின் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதிகளுக்கு ஒரே ஒரு போர்வை வழங்கப்பட்டது. கூடுதலாக மேலும் ஒரு போர்வை வழங்கப்படும். ஆனால் கண்டிப்பாக மெத்தை வசதி கிடையாது.
கைதிகளை பார்க்க வருவோர் வழங்கும் வாழைப்பழம், ஆப்பிள், சப்போட்டா, சாதம் என அனைத்தும் 2 கிலோவுக்கு கீழ் இருக்க வேண்டும். அதுபோன்று, உலர்ந்த பழங்கள், பேக்கரி பொருட்கள், பிஸ்கட், தின்பண்டங்கள் 500 கிராமுக்கு அதிகமாக இருக்க கூடாது.
விசாரணை கைதிகளுக்கு இரண்டு செட் ஆடைகளும், இரண்டு உள்ளாடைகளும் வழங்கப்படும். சிறையில் உடல் மற்றும் பாதுகாப்பு சோதனைகளை, சிறை அதிகாரிகள் நடத்தலாம். இந்த விதிகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.
சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் உட்பட 17 பேர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில், நடிகர் தர்ஷன் தனது கூடுதலாக போர்வை, படுக்கை வேண்டும் என்று கேட்டிருந்தார். அது நிராகரிக்கப்பட்டிருந்தது. அதுபோன்று நடிகை பவித்ரா கவுடா உட்பட மூன்று பேர், தங்களுக்கு வீட்டு உணவு வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தனர்.
வாரத்தில் ஒரு நாள் சாப்பிட நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், சிறை அதிகாரிகளோ, பல காரணங்களை கூறி, தர வாய்ப்பில்லை என்று கூறிவிட்டது.
சிறையில் தங்களுக்கான சலுகைகள் கேட்டு நீதிமன்றத்தை நாடியதால், சிறை துறை இந்நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

