/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கவயல் புதிய தாசில்தார் பதவியேற்பு
/
தங்கவயல் புதிய தாசில்தார் பதவியேற்பு
ADDED : ஜூலை 22, 2025 04:45 AM

தங்கவயல்: தங்கவயல் தாலுகா புதிய தாசில்தாராக பரத் நேற்று பதவியேற்றார்.
பெங்களூரில், கர்நாடக வருவாய்த் துறை அதிகாரியாக இருந்த பரத், தங்கவயலின் புதிய தாசில்தாராக நேற்று தாலுகா அலுவலகத்தில் பதவியேற்றார்.
இதுவரை தாசில்தாராக இருந்த நாகவேணி, பொறுப்புகளை ஒப்படைத்தார். அரசு ஊழியர்கள் சங்கத்தினர், முன்னாள் தாசில்தாருக்கு பிரியாவிடையும், புதிய தாசில்தாருக்கு வரவேற்பும் அளித்தனர்.
புதிய தாசில்தார் பரத் கூறுகையில், ''எது எப்படி இருந்தாலும், சட்ட விதிப்படி அனைவரும் செயல்பட வேண்டும். அது தான், நான் கற்றறிந்த பாடம். எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் என் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும்.
அலுவலகத்தில் ஏற்படும் சிறிய தவறுகளை திருத்திக் கொள்ளலாம். ஆனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒவ்வொருவரும் தமது கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும்,''என்றார்.