தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செய்திகள் சில வரிகளில்

 செய்திகள் சில வரிகளில்

 செய்திகள் சில வரிகளில்


ADDED : ஜூன் 26, 2026 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 01:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ ங்களூரின் ஹலசூரு 'கார் ஸ்ட்ரீட்டில்' உள்ள நகை கடையில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி, பத்து கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது. கொள்ளையில் ஈடுபட்ட தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கரபுரத்தை சேர்ந்த தேஜா, 19, என்பவரை, ஹலசூரு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 5 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ரா ம்நகரின் பைரமங்களா கிராமத்திற்கு வரும் 27ம் தேதி செல்ல உள்ளேன். நீங்களும் அங்கு வந்தால் பிடதி டவுன்ஷிப் தொடர்பாக விவசாயிகள் கருத்துகளை கேட்டறியலாம் என முதல்வர் சிவகுமாருக்கு, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கி ரஹலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்குவதில் 225 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பெ ங்களூரின் 27 வார்டுகளில் எஸ்.ஐ.ஆர்., பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இது சட்டவிரோதமானது. காங்கிரஸ் அரசின் கைப்பாவையாக மாநில தேர்தல் ஆணையம் மாறி உள்ளது என்று, மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

க ர்நாடகாவில் விளைவிக்கப்படும் தோத்தாபுரி மாம்பழத்திற்கு ஒரு குவிண்டாலுக்கு 1,750 ரூபாய் ஆதரவு விலையாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது என்று, மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us