தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செய்திகள் சில வரிகளில்

 செய்திகள் சில வரிகளில்

 செய்திகள் சில வரிகளில்


ADDED : செப் 29, 2026 03:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 03:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அக்., 13ல் யுவ தசரா மைசூரு தசரா அக்., 11 முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. அக்., 13 முதல் 17ம் தேதி வரை நடக்கும் யுவ தசராவை நடிகரும், நடன இயக்குநருமான பிரபு தேவா துவக்கி வைக்கிறார். அன்று இரவு 7:30 முதல் 10:30 மணி வரை விழா நடக்கிறது.

மரங்கள் கதி என்ன? பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில்வே காலனியில் உள்ள 8.61 ஏக்கர் நிலத்தில், தனியார் நிறுவனத்தின் ஐ.டி., வளாகம் கட்டுவதற்கு ரயில்வே அனுமதி அளித்தது. இந்த இடம் 60 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டு உள்ளது. இங்கு ஐ.டி., நிறுவனம் அமைப்பதற்கு 350க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அப்பகுதியினர் போராட்டம் நடத்தினர். மேலும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

கல்லட்கா எதிர்ப்பு கல்லுாரி மாணவி சவுஜன்யா, 17, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், மறுவிசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, ஐ.பி.எஸ்., அதிகாரி சசிகுமார் தலைமையில் எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. எஸ்.ஐ.டி., குழு மீது ஏற்கனவே சவுஜன்யாவின் தாய் குஸ்மா அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில், எஸ்.ஐ.டி.,யில் உள்ள அனைத்து அதிகாரிகளும் சிறப்பானவர்கள் அல்ல என ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் கல்லட்கா பிரபாகர் பட் தெரிவித்து உள்ளார்.

ஒடிஷா வாலிபர் பலி சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டுலுபேட் தாலுகா அரேபுரா பகுதியில் கேட் அருகே தனது பைக்கில் ஒடிஷாவை சேர்ந்த கமலகாந்த் நாயக், 25, சென்று கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக தண்ணீர் லாரி ஒன்று அவரது பைக்கில் மோதியது. இதில், கமலகாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தண்ணீர் லாரி ஓட்டுநர் தப்பியோடினார்.

லாரியில் தீ விபத்து பெங்களூரு தெற்கு மாவட்டம் கனகபுராவில் உள்ள பிரதான சாலையில் நேற்று மதியம் சென்று கொண்டிருந்த லாரி, தனக்கு முன்னால் சென்ற பைக் மீது மோதியது. இதில், திடீரென லாரியின் முன்பக்கம் தீப்பிடித்தது. தீ விபத்தில் பைக் ஓட்டியவர் படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லாரி ஓட்டுநர், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us