தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செய்திகள் சில வரிகளில்

 செய்திகள் சில வரிகளில்

 செய்திகள் சில வரிகளில்


ADDED : செப் 30, 2026 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 11:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பேச்சுக்கு சம்மதம்

ஒரு டன் கரும்புக்கு 5,500 ரூபாய் ஆதரவு விலை வழங்கக்கோரி, கரும்பு விவசா யிகள் ஹூப்பள்ளியில் நேற்று போராட்டம் நடத்தினர்.

இவ்விஷயத்தில் பேச்சு நடத்த டில்லிக்கு வருமாறு, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை ஏற்று, 30 விவசாய பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர், அக்டோபர் 10ம் தேதி, பிரஹலாத் ஜோஷியை சந்திக்க திட்டமிட்டு உள்ளனர்.

பஜ்ரங் தள் தலைவர் மீது தாக்கு

பீதர் மாவட்டம், ஹுலசூர் பகுதியை சேர்ந்த உள்ளூர் பஜ்ரங்தள் தலைவர் சந்திரசேகர், 34, நேற்று முன்தினம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இதனால், ஹுலசூர் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. சந்திரசேகர் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து,அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று மூடப்பட்டன.

இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்து உள்ளதாக பீதர் மாவட்ட போலீசார் தெரிவித்து உள்ளனர். சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

தாய், மகள் மரணம்

கலபுரகி மாவட்டம், ஆலந்த் தாலுகாவின் இக்களகி கிராமத்தில் வசிப்பவர் பீரப்பா, 55. இவரது மனைவி கவுரம்மா, 52. தம்பதிக்கு பாக்யஸ்ரீ, 25, அம்பிகா, 21, என்ற இரண்டு மகள்கள். குடும்ப தேவைக்காக, பீரப்பா பல இடங்களில் கடன் வாங்கியிருந்தார். திரும்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டார். இதனால் தம்பதிக்கிடையே, அவ்வப்போது சண்டை நடந்தது. நேற்று காலையும் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. மனம் வருந்திய கவுரம்மா, தன் இரண்டு மகள்களுடன் வீட்டு அருகில் இருந்த கிணற்றில் குதித்து, தற்கொலைக்கு முயற்சித்தார். இதை பார்த்த அப்பகுதியினர், மூவரையும் கிணற்றில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். அதற்குள் தாய் கவுரம்மாவும், மகள் பாக்யஸ்ரீயும் இறந்து விட்டனர். மற்றொரு மகள் அம்பிகா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us