ADDED : நவ 24, 2026 04:03 AM
மங்களூரு: கல்லுாரி மாணவி சவுஜன்யா கொலை வழக்கை விசாரிக்கும், எஸ்.ஐ.டி., அதிகாரிகள் முன், சமூக ஆர்வலர் கிரிஷ் மட்டன்னவர் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
பெங்களூரு: மைசூரின் நரசிம்மராஜா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., தன்வீர் செய்ட்டுக்கு முதல்வரின் அரசியல் செயலர் பதவியை ஒதுக்கி, கர்நாடக அரசு நேற்று அதிகாரபூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூரு: ஆர்.எம்.வி., 2வது ஸ்டேஜ் பகுதியில் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்ட கட்டடத்தில் வணிக நடவடிக்கைகள் நடப்பது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனது தீர்ப்பில் 21 வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்க உத்தரவிட்டது. நேற்று 10 நிறுவனங் களுக்கு, வடக்கு மாநகராட்சி ‘சீல்’ வைத்தது.
மங்களூரு: ‘‘சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் முடிவதற்குள் ஆஷா ஊழியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்,’’ என சுகாதார அமைச்சர் காதர் தெரிவித்தார்.
