/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நாளிதழ் விநியோகஸ்தர் மாநாடு பெலகாவியில் நடத்த திட்டம்
/
நாளிதழ் விநியோகஸ்தர் மாநாடு பெலகாவியில் நடத்த திட்டம்
நாளிதழ் விநியோகஸ்தர் மாநாடு பெலகாவியில் நடத்த திட்டம்
நாளிதழ் விநியோகஸ்தர் மாநாடு பெலகாவியில் நடத்த திட்டம்
ADDED : டிச 12, 2025 06:49 AM

பெலகாவி: ''நா ளிதழ் விநியோகஸ்தர்களின் மாநில அளவிலான 6வது மாநாடு, பெலகாவியில் நடக்கும்,'' என, அதன் மாநில தலைவர் ஷம்புலிங்கா அறிவித்து உள்ளார்.
மாநில அளவிலான நாளிதழ் விநியோகஸ்தர்கள் மாநாடு நடத்த தயாராவது குறித்து, பெலகாவியில் ஆலோ சனை கூட்டம் நடந்தது.
பின் அவர் அளித்த பேட்டி:
மாநில நாளிதழ் விநியோகஸ்தர்கள் சங்கம், நாளிதழ் விநியோகஸ்தர்களின் நலனுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்படுகிறது.
இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்கில், மாநாடு நடத்த உள்ளோம். நாளிதழ் விநியோகஸ்தர்களின், மாநில அளவிலான 6வது மாநாடு பெலகாவியில் நடக்கும்.
நாளிதழ் விநியோகஸ்தர்களின் பல்வேறு கோரிக்கைகள், அரசு முன் வைக்கப்பட்டுள்ளது. இவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். கொரோனா நேரத்தில் 300க்கும் மேற்பட்ட நாளிதழ் விநியோகஸ்தர்களை இழந்தோம். அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் கிடைக்க செய்வது, எங்கள் சங்கத்தின் பொறுப்பு.
நா ளிதழ் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு நடத்தும் மாநாட்டில், கர்நாடக பத்திரிகையாளர்கள் சங்கமும் கைகோர்ப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாகும்.
இவ்வாறு கூறினார்.
நாளி தழ் விநியோகஸ்தர்கள் சங்கத்தின், பெலகாவி மாவட்ட தலைவர் தீபக் ராஜகொள்கா கூறியதாவது:
பெலகாவி மாவட்டத்தில், மாநில அளவிலான ஆறாவது நாளிதழ் விநியோகஸ்தர்கள் மாநாடு நடத்துவது, மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மாநாட்டுக்கு கர்நாடக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் ஒத்துழைப்பை பெறுவோம். இந்த மாநாடு, மாறுபட்ட முறையில் நடத்தப்படும். அதில் அனைவரும் கைகோர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

