தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ராஜினாமா விஷயத்தில் நாடகம் வேண்டாம் என்கிறார் எம்.எல்.சி.,

ராஜினாமா விஷயத்தில் நாடகம் வேண்டாம் என்கிறார் எம்.எல்.சி.,

ராஜினாமா விஷயத்தில் நாடகம் வேண்டாம் என்கிறார் எம்.எல்.சி.,


UPDATED : நவ 25, 2026 12:00 AM

ADDED : நவ 24, 2026 08:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 12:00 AM ADDED : நவ 24, 2026 08:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ‘‘உங்களின் ராஜினாமாவால் மக்கள் நலன் மேம்படுமா’’ என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., நயனாவுக்கு, ம.ஜ.த., – எம்.எல்.சி., போஜே கவுடா, கேள்வி எழுப்பி உள்ளார்.

பெங்களூரு விதான் சவுதாவில், நேற்று அவர் அளித்த பேட்டி:

மனிதர் – விலங்கு மோதல் என்பது, கடந்த காலத்தில் நடந்த ஒன்றல்ல. மழை காலத்தில் ஏன் மோதல் ஏற்படுவதில்லை... அந்த பருவத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படும்போது, யானைகள் கிராமங்களுக்குள் நுழைகின்றன.

ஒரு சரணாலயத்தை சுற்றிலும் ரயில் தண்டவாள தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். யானைகள் நகருக்குள் வருவதை தடுப்பது எப்படி என்பதை அதிகாரிகள், சொல்ல வேண்டும்.

உங்களின் ராஜினாமாவால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. இவ்விஷயத்தை முதல்வர், வனத்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அதை விடுத்து ராஜினாமா என்ற போர்வையில் நாடகம் ஆடுவது சரியல்ல. மக்களின் பிரச்னைகளுக்கு உரிய வகையில் தீர்வு காண முயற்சி செய்யுங்கள்.

வனப்பகுதியில் யானைகளுக்கு உணவு கிடைக்க செய்வதில் கவனம் செலுத்துங்கள். யானைகள் நிம்மதியாக வாழ, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்களால் முடியவில்லை என்றால், ராஜினாமா செய்து விடுங்கள்; உலகத்திற்கு நன்மை தான். மக்களை அச்சுறுத்தாதீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us