/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடிகர் தர்ஷன் விவகாரத்தில் விதிமீறல் இல்லை! சட்ட சேவை ஆணையம் அறிக்கை சமர்ப்பிப்பு
/
நடிகர் தர்ஷன் விவகாரத்தில் விதிமீறல் இல்லை! சட்ட சேவை ஆணையம் அறிக்கை சமர்ப்பிப்பு
நடிகர் தர்ஷன் விவகாரத்தில் விதிமீறல் இல்லை! சட்ட சேவை ஆணையம் அறிக்கை சமர்ப்பிப்பு
நடிகர் தர்ஷன் விவகாரத்தில் விதிமீறல் இல்லை! சட்ட சேவை ஆணையம் அறிக்கை சமர்ப்பிப்பு
ADDED : அக் 18, 2025 11:23 PM

பெங்களூரு: 'கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகர் தர்ஷனுக்கு, சிறை விதிகள் பின்பற்றப்பட்டுள்ளன' என, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், மாநில சட்ட சேவை ஆணைய குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் உட்பட ஏழு பேர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதி ஆய்வு நடிகர் தர்ஷன் உட்பட ஏழு பேரும், காணொளிக்காட்சி மூலமும், மற்றவர்கள் நேரிலும் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணை 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட 'ஏ12' லட்சுமணன் சார்பில், 'தன்னை இவ்வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதும் 24ம் தேதி விசாரணை நடைபெறுகிறது.
'சிறையில் தனக்கு வசதிகள் செய்து தர நீதிமன்றம் உத்தரவிட்டும், செய்யவில்லை' என்று தர்ஷன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு தொடர்பாக ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த 14ம் தேதி மாநில சட்ட சேவை ஆணைய நீதிபதி வரதராஜ் சிறையில் ஆய்வு செய்தார். இதுதொடர்பான அறிக்கை, 'சீல்' வைக்கப்பட்ட உறையில் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
தர்ஷன் அடைக்கப்பட்டுள்ள அறையில் இரண்டு கழிப்பறைகள் உள்ளன. ஒன்று இந்திய பாணியிலும், மற்றொன்று மேற்கத்திய பாணியிலும் உள்ளது. விசாரணை கைதிகளுக்கு படுக்கை, தலையணை வசதிகள் வழங்கப்படாது. தர்ஷன் நடை பயிற்சி செய்யவும், விளையாடவும் அனுமதிக்க வேண்டும்.
தொற்று இல்லை கைதிகள், 'டிவி' பார்க்க அனுமதி உள்ளது. ஆனால் ஒவ்வொரு மாடி அறையிலும் டிவி இருக்க வேண்டும் என்ற விதி இல்லை. தொலைபேசியில் பேசும்போது, 'ஸ்பீக்கர் ஆன்' செய்யப்படுவதாக தர்ஷன் புகார் தெரிவித்துள்ளார். குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கண்காணிக்க, இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசி அழைப்புகளை பதிவு செய்ய, சட்டத்தில் விதி உள்ளது.
சூரிய ஒளி இல்லாததால், தர்ஷன் காலில் பூஞ்சை ஏற்பட்டதாக கூறியிருந்தார். அவரது காலை பரிசோதித்தபோது, பூஞ்சை இல்லை. அவரது காலில் வெடிப்பு இருந்தது. தோல் மருத்துவர் ஜோதி பாய், பரிசோதித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அவரை சிறை மருத்துவர்கள் பரிசோதிக்கின்றனர். அவருக்கு பிசியோதெரபி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தண்டனை பெற்ற கைதிகளுக்கு தான் கொசு விரட்டி, கண்ணாடி, சீப்பு வழங்கப்படும். விசாரணை கைதிகளுக்கு வழங்க முடியாது. தர்ஷன் தங்கி உள்ள கட்டடம் அருகில் இரவு முழுதும் விளக்கு எரிகிறது. சிறை விதிகள் பின்பற்றப் படுகின்றன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.