sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 12, 2026 ,பங்குனி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

'ஜாம்பி' போதைப்பொருள் தொடர்பாக வீடியோ வெளியிட்டோருக்கு  நோட்டீஸ்! : அவதுாறு பரப்பினால் நடவடிக்கை என பெங்களூரு போலீஸ் எச்சரிக்கை

/

'ஜாம்பி' போதைப்பொருள் தொடர்பாக வீடியோ வெளியிட்டோருக்கு  நோட்டீஸ்! : அவதுாறு பரப்பினால் நடவடிக்கை என பெங்களூரு போலீஸ் எச்சரிக்கை

'ஜாம்பி' போதைப்பொருள் தொடர்பாக வீடியோ வெளியிட்டோருக்கு  நோட்டீஸ்! : அவதுாறு பரப்பினால் நடவடிக்கை என பெங்களூரு போலீஸ் எச்சரிக்கை

'ஜாம்பி' போதைப்பொருள் தொடர்பாக வீடியோ வெளியிட்டோருக்கு  நோட்டீஸ்! : அவதுாறு பரப்பினால் நடவடிக்கை என பெங்களூரு போலீஸ் எச்சரிக்கை


ADDED : ஏப் 11, 2026 04:15 AM

Google News

ADDED : ஏப் 11, 2026 04:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு எலஹங்காவில் உள்ள நிட்டே மீனாட்சி தொழில்நுட்ப கல்லுாரி அருகே, கடந்த மூன்று நாட்களுக்கு முன் வாலிபர் ஒருவர், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல், ஒரே இடத்தில் அசையாமல் நின்று கொண்டிருந்தார்.

இதனை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த நபர் ஜாம்பி போதைப்பொருள் அல்லது சைலாசின் உட்கொண்டு இருக்கலாம் என்றும், வீடியோவில் பேசி இருந்தார்.

வீடியோ வேகமாக பரவியது. அதனால், பெங்களூரில் புதுவகை போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து இருப்பதாகவும் பேசப்பட்டது.

இதுகுறித்து நேற்று முன்தினம் விளக்கம் அளித்த, போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங், ''சமூக வலைதளத்தில் பரவும் வீடியோவில் இருக்கும் வாலிபர் அடையாளம் காணப்பட்டார். அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது, ஜாம்பி போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அவருக்கு உடல்நல பாதிப்பு இருந்ததால், சில மாத்திரைகளை சாப்பிட்டு உள்ளார். அத்துடன், மதுவும் அருந்தியதால் விசித்திரமாக நடந்து கொண்டார். வேறு எதுவும் நடக்கவில்லை,'' என்றார்.

வாலிபர் கைது இதற்கிடையில், கன்னட நடிகர் துனியா விஜய் வெளியிட்ட வீடியோவில், ''நான் நடித்த பீமா படத்தில், போதைப்பொருள் பயன்பாட்டால் இளைஞர்கள் வாழ்க்கை சீரழிவது குறித்து தெரிவித்துள்ளேன். பெங்களூரில் ஜாம்பி போதைப்பொருள் கலாசாரம் பரவுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பெற்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிள்ளைகள் மீது கண் வைக்க வேண்டும். போலீஸ் துறையும் இதுகுறித்து ஆழமான விசாரணை நடத்த வேண்டும்,'' என, தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வாலிபர் அசையாமல் நின்றதை வீடியோ எடுத்து வெளியிட்ட, ராஜனகுண்டே பகுதியின் ஹேமந்த், 29 என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்த போது, அந்த இளைஞர் சுயநினைவு இன்றி நின்றதால், ஜாம்பி போதைப்பொருள் பயன்படுத்தி இருக்க லாம் என்று நினைத்து, வீடியோ வெளியிட்டேன். தவறு நடந்து விட்டதாக, போலீசார் முன் கூறினார். இதனால், அவர் போலீஸ் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

மன்னிப்பு கேட்பு பின், ஹேமந்த் வெளியிட்ட வீடியோவில், ''ஏப்ரல் 7ம் தேதி பாகலுாரில் இருந்து ராஜனகுண்டேவுக்கு பைக்கில் சென்றேன். நிட்டே மீனாட்சி கல்லுாரி அருகே, வாலிபர் ஒருவர் அசையாமல் நின்றதை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு, ஜாம்பி போதைப்பொருள் பயன்படுத்தினாரா என்று கேட்டிருந்தேன். போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் ஜாம்பி பயன்படுத்தவில்லை எனபது தெரிய வந்துள்ளது. தவறான தகவலை பரப்பியதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்,'' என்று கூறியுள்ளார்.

போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் கூறுகையில், ''சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவின் உண்மை தன்மை தெரியாமல் பகிரக்கூடாது. ஜாம்பி போதைப்பொருள் பயன்பாடு இருப்பதாக பொய்யாக அவதுாறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

இந்த வழக்கில் பொதுமக்களிடம் பயம் ஏற்படுத்தும் வகையில் வீடியோவை மறுபகிர்வு செய்தவர்கள், நடிகர் துனியா விஜய் உட்பட 25 பேரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் தயாராகி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us