ADDED : செப் 10, 2026 11:06 PM
அ நிறம் | அளவு
கோலார்: கோலார் மாவட்டத்தில், 1.42 லட்சம் வாக்காளர்களை சேர்ப்பதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதில், சரிப்படுத்திக்கொள்ள, 75 ஆயிரத்து 938 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கோலார் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி நடக்கிறது. இதில், 6 சட்டசபைத் தொகுதிகளில், 1,42,181 வாக்காளர்களின் பெயர்களை சேர்ப்பதில் குளறுபடி இருப்பது தெரியவந்துள்ளது.
இதை சரிப்படுத்த, இதுவரை, 75 ஆயிரத்து 938 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
