/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சட்டவிரோதமாக ஸ்கேனிங் சென்டர் நடத்த பண்ணை வீடு வாங்கிய நர்ஸ்
/
சட்டவிரோதமாக ஸ்கேனிங் சென்டர் நடத்த பண்ணை வீடு வாங்கிய நர்ஸ்
சட்டவிரோதமாக ஸ்கேனிங் சென்டர் நடத்த பண்ணை வீடு வாங்கிய நர்ஸ்
சட்டவிரோதமாக ஸ்கேனிங் சென்டர் நடத்த பண்ணை வீடு வாங்கிய நர்ஸ்
ADDED : அக் 25, 2025 05:12 AM

மைசூரு: சட்டவிரோதமாக 'ஸ்கேனிங் சென்டர்' நடத்தி, பணம் சம்பாதிக்கவே நர்ஸ் ஒருவர், பண்ணை வீடு வாங்கியது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
மைசூரு மாவட்டம், டி.நரசிபுரா தாலுகாவின், ஹனகனஹள்ளி கிராமத்தில், சொகுசு பண்ணை வீடு உள்ளது. இது சட்டவிரோத ஸ்கேனிங் சென்டராக செயல்பட்டு வந்தது. கர்ப்பிணியரின் கருவின் பாலினத்தை சட்டவிரோதமாக கண்டறிவதுடன், பெண் குழந்தைகளாக இருந்தால் கருக்கலைப்பும் செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்து சுகாதாரத்துறை அதிகாரிகள், அங்கு சென்று சோதனை நடத்தினர். வீட்டின் உரிமையாளரான நர்ஸ் ஷியாமளா கார்த்திகேயன், இவரது தம்பி கோவிந்தராஜு, சிவகுமார், ஹரிஷ் உட்பட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இங்கு கர்ப்பிணியரை அழைத்து வந்த ஏஜென்ட் புட்டராஜு தலைமறைவாக உள்ளார்.
சட்டவிரோத ஸ்கேனிங் சென்டர் குறித்து போலீசார் கூறியது:
நர்ஸ் ஷியாமளா கார்த்திகேயன், மைசூரில் 25 படுக்கைகள் கொண்ட எஸ்.கே.மருத்துவமனை மற்றும் பரிசோதனை மையத்தை நடத்தி வந்தார். இங்கு ஸ்கேனிங் செய்து, சட்டவிரோதமாக கருவின் பாலினத்தை அறிவித்தும் வந்துள்ளார். கருக்கலைப்பும் செய்துள்ளார்.
அதில் கிடைத்த பணத்தை கொண்டு, ஹனகனஹள்ளி கிராமத்தில் சொகுசு பண்ணை வீடு வாங்கியுள்ளார். இங்கு கருக்கலைப்பு மற்றும் பரிசோதனைக்கு நேரடியாக வருபவர்களுக்கு சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதை காட்டிக் கொள்ள மாட்டார்.
இதற்காக தான் நியமித்துள்ள இடைத்தரகர்கள் மூலம் வரும் நபர்களுக்கு மட்டுமே கருவின் பாலினத்தை அறிவிப்பார். கருக்கலைப்பும் செய்துள்ளார்.
இதுவரை இவரிடம் கருக்கலைப்பு செய்தவர்களிடம் இருந்து தகவல்கள் பெற விசாரணை நடந்து வருகிறது.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின், மைசூரு மாவட்ட மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் மொபைல் போன்களை கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள தகவல்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த கும்பலுடன் தொடர்புடைய புட்டராஜு மற்றும் சாமி ஆகியோரை தேடி வருகிறோம்.
ஸ்கேனிங் சென்டரில் இருந்த, இரண்டு கர்ப்பிணியரை விசாரித்தபோது, 'ஏற்கனவே எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. மூன்றாவதும் பெண்ணாக பிறந்தால், கணவர் வீட்டில் கொடுமைக்கு ஆளாவோம். எனவே ஸ்கேன் செய்து, குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்ள, கணவரே 30,000 ரூபாய் கொடுத்து அனுப்பினார்' என்றனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

