/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாணவர்களுக்கு முட்டைகள் கோலார் அதிகாரி கண்டிப்பு
/
மாணவர்களுக்கு முட்டைகள் கோலார் அதிகாரி கண்டிப்பு
ADDED : ஜூலை 19, 2025 11:11 PM
கோலார்: ''கோலார் மாவட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு முட்டைகள் ஒழுங்காக வழங்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்,'' என, கோலார் மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி பிரவீன் பி.பாகவாடி தெரிவித்தார்.
மாவட்டத்தின் அனைத்து கல்வி அதிகாரிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகளின் கூட்டம் நேற்று கோலார் மாவட்ட பஞ்சாயத்து அலுவலக அரங்கில் நடந்தது. அவர் பேசியதாவது:
பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை வழங்கும் திட்டம், அனைத்து பள்ளிக்கும் சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
ஒரு முட்டையில் 6.3 கிராம் புரதம் உள்ளது. 9 பயனுள்ள அமினோ அமிலங்கள் உள்ளன. இத்தகைய ஊட்டச்சத்துகள் மாணவர்களின் உடல் வளர்ச்சிக்கு உதவும்.
மூளை வளர்ச்சி, இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, எலும்பு வளர்ச்சி, கண் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
கோலார் மாவட்டத்தின் அனைத்து கல்வி அதிகாரிகளும் பள்ளிகளுக்கு சென்று முட்டையில் உள்ள சத்துகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
பள்ளிகளில் துாய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிராம பஞ்சாயத்து அளவில் டிஜிட்டல் நுாலகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தோட்டங்களில் மருத்துவ தாவரங்கள் வளர்க்க வேண்டும்.
ஊட்டச்சத்து தோட்டம் என்ற திட்டம் மாணவர்களுக்கு வழிகாட்டும். பள்ளி வளாகங்களில் ஆயுஷ் துறை தொடர்பான மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட பஞ்சாயத்து துணை செயலர் டி.கே.ரமேஷ், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை துணை இயக்குநர் நாராயணசாமி, மாவட்ட கல்வி அலுவலர்கள், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் எஸ்.ஆர்.குமாரசாமி, ஆயுஷ் துறை இயக்குநர் ராகவேந்திரா செட்டிகார் ஆகியோர் பங்கேற்றனர்.