/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பாரம்பரியம், கலாசாரம், கவுரவம் குறையாத வகையில் 'கிரேட்டர் மைசூரு' உருவாக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
/
பாரம்பரியம், கலாசாரம், கவுரவம் குறையாத வகையில் 'கிரேட்டர் மைசூரு' உருவாக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
பாரம்பரியம், கலாசாரம், கவுரவம் குறையாத வகையில் 'கிரேட்டர் மைசூரு' உருவாக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
பாரம்பரியம், கலாசாரம், கவுரவம் குறையாத வகையில் 'கிரேட்டர் மைசூரு' உருவாக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
ADDED : நவ 04, 2025 04:40 AM

மைசூரு:  ''மைசூரின் பாரம்பரியம், கலாசாரம், கவுரவம் குறையாத வகையில், 'கிரேட்டர் மைசூரு' உருவாக்க வேண்டும்,'' என, அதிகாரிகளுக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
மைசூரு மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
மைசூரின் பாரம்பரியம், கலாசாரம், கவுரவம் குறையாத வகையில், 'கிரேட்டர் மைசூரு' உருவாக்க வேண்டும். பெங்களூரை போன்று குடிநீர், நடைபாதை, கழிவுநீர், குப்பை சுத்திகரிப்பு மையம் உட்பட பல பிரச்னைகள் இல்லாத வகையில், அறிவியல் பூர்வமான வரைபடம் தயாரியுங்கள்.
கிரேட்டர் மைசூரு மிகவும் நேர்த்தியாகவும், தேவையான அடிப்படை வசதிகளுடன் இருக்க வேண்டும். இதை செயல்படுத்தும்போது, அடுத்த 15 - 20 ஆண்டுகளுக்கு என்பதை கருத்தில் கொண்டு திட்டமிட்டு செயல்படுத்துங்கள்.
எக்காரணத்தை கொண்டும் போக்குவரத்து நெரிசல் இருக்கக் கூடாது. வேலைவாய்ப்பு உருவாக்குதல் முதல் திடக்கழிவு மேலாண்மை வரை, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிக்கவும்.
கழிவுகள் அகற்றம், தொழிற்சாலை கழிவுகள் அகற்றம் என அனைத்தும் அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும். நவீன தொழில்நுட்பத்தின் உதவியை நாம் கையாள வேண்டும். குடியிருப்புகள் கட்டும்போது, வடிகால், சாலைகள், கழிவுநீர், குடிநீர், மின்சாரம், பூங்காக்கள் நேர்த்தியாக இருக்க வேண்டும்.
மைசூருக்கு இன்னொரு வெளிவட்டசாலை தேவை உள்ளது. இதற்காக இப்போதே திட்டமிடுங்கள். வருமானம் அதிகரிக்க, தேவையான தெளிவான மதிப்பீட்டு திட்டத்தை வகுக்க வேண்டும்.
அகலமான சாலைகள் தான் மைசூரின் அடையாளம். இதை மனதில் வைத்துக் கொண்டு கிரேட்டர் மைசூரு திட்டத்தை செயல்படுத்துங்கள். மக்கள் தொகைக்கு ஏற்ப, துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின், புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் சிலையை, முதல்வர் சித்தராமையா நேற்று திறந்து வைத்து அவர் பேசியதாவது:
சமத்துவமின்மையை நீக்கி, தாழ்த்தப்பட்டவர்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டியது ஒவ்வொரு அரசியல்வாதிகளின் பொறுப்பு. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, தேவராஜ் அர்ஸ், வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். அந்த வாய்ப்புகள் மூலம், பலர் சமூகத்தின் முக்கிய நீரோட் டத்துக்கு வந்தனர்.
தேவராஜ் அர்ஸ் நீண்ட கா லம் முதல்வராக இருந்து, சம வாய்ப்புகள் உருவாக்க பாடுபட்டார். பெரும்பான்மையான சூத்திர சமூகத்தினர், கல்வி பெறாமல் இருப்பதால் தான், சமத்துவமின்மை உருவாகி உள்ளது.
சமத்துவமின்மையை நீக்கி, சம வாய்ப்புகளை உருவாக்க காங்கிரஸ் அரசு பாடுபட்டு வருகிறது. மக்கள் சார்பு மற்றும் சமூக நீதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கல்வியும், திறமையும் யாருடைய சொத்தும் அல்ல. அனைவரிடமும் திறமை இருக்கிறது. இதற்கு அம்பேத்கர், வால்மீகி, வியாசர் ஆகியோர் உதாரணம். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் நம் மாநிலத்துக்கு, கர்நாடகா என்று பெயரிடப்பட்டது. அதன் பொன் விழாவை கொண்டாடியதும் எங்கள் அரசு தான்.
இவ்வாறு பேசி னார்.

