/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறப்பு டாக்டர்களின் ஓய்வு வயது அதிகரிக்க அதிகாரிகள் ஆட்சேபம்
/
சிறப்பு டாக்டர்களின் ஓய்வு வயது அதிகரிக்க அதிகாரிகள் ஆட்சேபம்
சிறப்பு டாக்டர்களின் ஓய்வு வயது அதிகரிக்க அதிகாரிகள் ஆட்சேபம்
சிறப்பு டாக்டர்களின் ஓய்வு வயது அதிகரிக்க அதிகாரிகள் ஆட்சேபம்
ADDED : ஏப் 24, 2025 07:14 AM
பெங்களூரு: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளின் சிறப்பு டாக்டர்களின் ஓய்வு வயதை அதிகரிப்பது குறித்து, கர்நாடக அரசு ஆலோசிக்கிறது.
மாநிலத்தின் முக்கியமான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளான ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை, கித்வாய், விக்டோரியா, நெப்ரோ யூராலஜி, பவுரிங் உட்பட அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்பு டாக்டர்களின் தற்போது ஓய்வு வயது, 60 ஆக உள்ளது.
ஏற்கனவே மருத்துவமனைகளில் சிறப்பு டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதனால் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, சிறப்பு டாக்டர்களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனுாரின் மலை மஹாதேஸ்வரா மலையில், இன்று முதல்வர் சித்தராமையா தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடக்கவுள்ளது. இதில் சிறப்பு டாக்டர்களின் ஓய்வு வயதை அதிகரிப்பது குறித்து, முடிவு செய்யப்பட வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவனைகளின் நிர்வாகங்களுக்கு மருத்துவ கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், எங்கெங்கு சிறப்பு டாக்டர்கள், ஓய்வு எல்லையில் உள்ளனர், எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்பது குறித்து, தகவல் கேட்டுள்ளது.
சிறப்பு டாக்டர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் அரசின் முடிவுக்கு, மருத்துவ கல்வித்துறையில் சில அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். 'சிறப்பு டாக்டர்களை நியமிக்க எட்டு ஆண்டுகளாக விண்ணப்பமே கோரவில்லை.
திறமையான இளம் டாக்டர்களுக்கு, வாய்ப்பு மறுப்பது சரியல்ல. சிறப்பு டாக்டர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காண, புதியவர்களை நியமிக்க வேண்டும்' என, அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

